மாற்றப்படுமா தபால் பெட்டி?

சென்னை மணலி புதுநகர் அஞ்சல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி பழுதடைந்துள்ளது.
Updated on
1 min read

சென்னை மணலி புதுநகர் அஞ்சல் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி பழுதடைந்துள்ளது. அந்தப் பெட்டியில் கடிதங்களை போடவே முடியவில்லை. பெட்டியின் உள்ளே உள்ள ஏதோ ஒரு பொருள் கடிதங்களைப் போட முடியாமல் தடுக்கிறது. இந்தப் பெட்டி வைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இந்தப் பெட்டியை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும். இல்லாவிட்டால் புதிய பெட்டி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

இதுகுறித்து கிளை அஞ்சலக அதிகாரியிடம் பலமுறை கூறியும், அவர் செவிசாய்க்கவில்லை. தபால் பெட்டி பொது மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதால் இவ்விஷயத்தில் அஞ்சல் துறை உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com