ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பகுதி - 198

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள்.  முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பராவார் என்பார்கள். 

Updated On :1 ஏப்ரல் 2016, 11:24 am

காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்பார்கள்.  முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒரு பிடிசாம்பராவார் என்பார்கள்.  போற்றிப் போற்றி வளர்த்த, பாதுகாத்த உடல் இறுதியில் பிடிசாம்பலாகத்தான் போகப் போகிறது.  முருகா, அது வெறும் சாம்பலாகத்தான் போகப் போகிறது.  ஆனால் அதற்கு முன்னால் இந்த உடலெடுத்ததற்கும், சுமந்து திரிந்ததற்குமான பயன் என்று ஒன்று உண்டல்லவா, அதை நீ தந்தருள வேண்டாமா என்று கேட்காமல் கேட்கிறது பாடல்.  திருஞான சம்பந்தராக அவதரித்த முருகனே என்று சீர்காழித் திருப்புகழ் அனைத்தினிலும் தவறாமல் சொல்கிறார்.

தனதன தாந்ததான தனதன தாந்ததான
தனதன தாந்ததான                     தனதான

தினமணி சார்ங்கபாணி யெனமதிள் நீண்டுசால
   தினகர னேய்ந்தமாளி                             கையிலாரஞ்
செழுமணி சேர்ந்தபீடி கையிலிசை வாய்ந்தபாடல்
   வயிரியர் சேர்ந்துபாட                            இருபாலும்
இனவளை பூண்கையார்க வரியிட வேய்ந்துமாலை
   புழுககில் சாந்து பூசி                             யரசாகி
இனிதிறு மாந்துவாழு மிருவினை நீண்டகாய
   மொருபிடி சாம்பலாகி                            விடலாமோ
வனசர ரேங்கவான முகடுற வோங்கிஆசை
   மயிலொடு பாங்கிமார்க             ளருகாக
மயிலொடு மான்கள்சூழ வளவரி வேங்கையாகி
   மலைமிசை தோன்றுமாய                         வடிவோனே
கனசமண் மூங்கர்கோடி கழுமிசை தூங்கநீறு
   கருணைகொள் பாண்டிநாடு                        பெறவேதக்
கவிதரு காந்தபால கழுமல பூந்தராய
   கவுணியர் வேந்ததேவர்                            பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/256728229&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.