ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா

பகுதி - 175

எந்தத் தனிப்பட்டவருக்கும் இல்லாமல் உலகில் தோன்றியுள்ள அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து நற்கதியைக் கோருகிறது இப்பாடல்.

Updated On :4 மார்ச் 2016, 7:10 am

எந்தத் தனிப்பட்டவருக்கும் இல்லாமல் உலகில் தோன்றியுள்ள அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து நற்கதியைக் கோருகிறது இப்பாடல்.

பதச் சேதம்

சொற் பொருள்

சரவண பவ நிதி அறு முக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி சரவண பவ: சரவணத்தில் தோன்றியவனே; நிதி: செல்வமே; குருபர: ஞானகுரு மூர்த்தியே; எனஓதி: என்று உரைத்து;
தமிழினில் உருகிய அடியவர் இடம் உறு சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற தரு பிணி து(ள்)ள வரம் எமது உயிர் சுகம் உற அருள்வாயே சிவம் உற: சிவப் பேற்றை அடைய; தருபிணி து(ள்)ள: வருகின்ற நோய் துள்ளி ஓட;
கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு கரி திரு முகர் துணை கொ(ள்)ளும் இளையவ கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா கருணைய விழிபொழி: விழிபொழி கருணைய என்று மாற்ற; கரிதிருமுகர்: ஆனைமுகரை; துணைகொளும் இளையவ: துணையாகக் கொண்டவனான தம்பியே;
கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும் நிலைபெற கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே கழியவும்: நீங்கவும்;
திரி புரம் எரி செயும் இறையவர் அருளிய குமர சமர புரி தணிகையும் மிகும் உயர் சிவகிரியிலும் வட மலையிலும் உலவிய வடிவேலா சமரபுரி: திருப்போரூர்; தணிகை: திருத்தணிகை; சிவகிரி: பழனி; வடமலை: திருவேங்கட மலை;
தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும் இரு பொருளிலும் இலகுவ திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெரு வாழ்வே மனது குடியும்: மனத்தில் குடிகொண்டும்; இருபொருளிலும்: சக்தி, சிவம் என்ற இரண்டு பொருளிலும்; திமிர: இருளாகிய; தினகரன்: ஆதவன்;
அரவு அணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவே வரும் அதிசயம் உடையவ அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே நரகரி: நரகாசுரனைப் பகைத்துக் கொன்றவர்; நெடியவர்: திருமால்; அமலி, விமலி: மலமற்றவள்; பரை: பராசக்தி;
அதலம் விதலம் முதல் கிடுகிடு கிடுஎன வரும் மயிலில் இனிது ஒளிர் ஷடுமையில் நடுவு உற அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே. அதலம் விதலம்: அதல, விதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாள என்று கீழ் உலகங்கள் ஏழு; ஷடுமை: ஆறெழுத்து மந்திரம்; ஷடுமையில்: ஆறெழுத்து மந்திரத்தில்.

சரவண பவ நிதி அறு முக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர சரவண பவ நிதி அறுமுக குருபர என ஓதி… சரவணப் பொய்கையில் உதித்தவனே, செல்வமே, ஆறுமுகனே, ஞான குருமூர்த்தியே என்று திரும்பத் திரும்ப உச்சரித்து,

தமிழினில் உருகிய அடியவர் இடம் உறு… தமிழ்ப் பாடல்களில் உள்ள சுவையில் மனமுருகிய அடியார்களிடம் வந்து சேரும்,

சனன மரணம் அதை ஒழிவுற சிவம் உற தரு பிணி து(ள்)ள வரம் எமது உயிர் சுகம் உற அருள்வாயே.. பிறப்பு இறப்பு ஆகிய பிணிகள் நீங்கி, சிவப்பேற்றை அடைந்து; பற்றிக் கொள்வதற்காக வரும் நோய்களெல்லாம் துள்ளி ஓட வரமளித்து, எங்களுடைய உயிர் சுகம் பெற்றிருக்க அருள்வாயே.

(கேட்பது உடலுக்கான பிணி நீக்கம்; உயிருக்கான சுகம் — ஆத்மானுபவம்)

கருணைய விழி பொழி ஒரு தனி முதல் என வரு… கருணை பொழியும் விழிகளைக் கொண்டவனே!  ஒப்பற்ற தனிமுதல்வனாக வந்த,

கரி திரு முகர் துணை கொ(ள்)ளும் இளையவ கவிதை அமுத மொழி தருபவர் உயிர் பெற அருள் நேயா… ஆனைமுகரைத் துணைவனாகக் கொள்ளும் இளையவனே!  அமுதம் போன்ற சொற்களாலே பாடல்களை அமைத்துத் தருபவர்களுடைய உயிர் நற்கதி பெற அருள்கின்ற நேசனே (அன்பு பூண்டவனே)!

கடல் உலகினில் வரும் உயிர் படும் அவதிகள் கலகம் இனையது உள கழியவும்… கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தோன்றுகின்ற எல்லாவிதமான உயிர்களும் படும் அவதிகளும், அவற்றுள் ஏற்படும் கலகங்களும், இவற்றைப் போன்றுள்ள அத்தனையும் நீங்கிப் போக வேண்டும்;

நிலைபெற கதியும் உனது திருவடி நிழல் தருவதும் ஒரு நாளே… உயிர்களெல்லாம் நற்கதியில் நிலைபெறும்படி உன்னுடைய திருவடியின் அடியிலே, அதன் நிழலிலே எம்மை ஏற்றுக் கொள்ளும் நிலை ஒருநாள் எமக்குக் கிட்ட வேண்டும்.

திரி புரம் எரி செயும் இறையவர் அருளிய குமர… திரிபுரத்தை எரித்தவரான பரமேஸ்வரர் அளித்த குமரனே!

சமர புரி தணிகையும் மிகும் உயர் சிவகிரியிலும் வட மலையிலும் உலவிய வடிவேலா…திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்ததான சிவகிரியிலும் (பழனியிலும்), திருவேங்கடத்திலும் உலாவுகின்ற கூர்மையான வேலை ஏந்தியவனே!

தினமும் உனது துதி பரவிய அடியவர் மனது குடியும்…  அன்றாடம் உன்னைத் துதித்துப் பரவும் அடியார்களுடைய மனத்திலே குடியேற வேண்டும்;

இரு பொருளிலும் இலகுவ… சக்தி - சிவம், கல்வி - செல்வம் என்று இரண்டிரண்டாக உள்ள அனைத்திலும் விளங்குபவனே!

திமிர மலம் ஒழிய தினகரன் என வரு பெரு வாழ்வே… இருள் என்னும் மலம்—ஆணவமலம்—நீங்குவதற்காக எழுந்துள்ள கதிரவனே!  அடியார்களுடைய பெருவாழ்வே!

அரவு அணை மிசை துயில் நரகரி நெடியவர் மருகன் எனவே வரும் அதிசயம் உடையவ… பாம்பணையில் துயில்பவரும்; நரகாசுரனைக் கொன்றவரும்; விக்கிரமாவதாரத்தில் நெடியவனாக வளர்ந்தவருமான திருமாலின் மருகன் என்று சொல்லும்படியாகத் தோன்றி அதிசயத்தை உடையவனே!

அமலி விமலி பரை உமையவள் அருளிய முருகோனே… மலமற்றவள்; பராசக்தி; உமை என்றெல்லாம் போற்றப்படும் பரமகல்யாணி ஈன்ற முருகா!

அதலம் விதலம் முதல் கிடுகிடு கிடுஎன வரும் மயிலில்… அதல, விதல, சுதல, சுதல, தராதல, மகாதல, ரசாதல, பாதாள என்று கீழ் உலகங்கள் ஏழும் கிடுகிடுக்குமாறு வருகின்ற மயில்மீது ஏறிக்கொண்டு,

இனிது ஒளிர் ஷடுமையில் நடுவு உற அழகினுடன் அமரும் அரகர சிவசிவ பெருமாளே… ஆறெழுத்து மந்திரத்தின் நடுவிலே அழகுறப் பொருந்தி அமர்ந்திருக்கின்ற ஹரஹர சிவசிவப் பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரங்களை எரித்தவரான பரமேஸ்வரர் அளித்த குமரா!  திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரி எனப்படும் பழனியிலும், வடவேங்கட மலையிலும் கூரிய வேலை ஏந்தியபடி உலவுபவனே!  அனுதினமும் உன்னுடைய புகழைத் துதித்துப் பாடிப்பரவும் அடியார்களுடைய மனத்தில் குடியேற வேண்டும்; சக்தி - சிவம், கல்வி - செல்வம் என்று இரண்டிரண்டாக உள்ள அனைத்துப் பொருள்களிலும் விளங்குபவனே!  இருளான ஆணவமலத்தை நீக்குவதற்காக உதித்திருக்கும் பகலவனே!  அடியார்களுடைய பெருவாழ்வே!

ஆதிசேடனான பாம்பணையில் துயில்பவரும்; நரகாசுரனைக் கொன்றவரும்; திருவிக்கிரமனாக வந்து நெடியவனாக வளர்ந்தவருமான திருமாலுடைய மருமகன் என்று சொல்லும்படியாக வந்துள்ள அதிசயமான மூர்த்தியே! அமலியும் விமலியுமாக (மலமற்றவளாக)வும்; பராசக்தியாகவும் உமையாகவும் போற்றப்படும் பரமகலியாணி அருளிய முருகா!

அதல விதல சுதல முதலான ஏழு கீழ் உலகங்களும் கிடுகிடுத்து நடுங்குமாறு நடமிடுகிற மயில்மேலே விளங்கும் பெருமாளே!  ஆறெழுத்து மந்திரத்தின் மத்தியிலே அழகுறப் பொருந்தியுள்ள ஹரஹர சிவசிவப் பெருமாளே!  கருணையைப் பொழியும் விழிகளைக் கொண்டவனே!  ஒப்பற்ற தனிமுதல்வனான ஆனைமுகனைத் துணைவனாகக் கொண்ட இளையவனே!  அமுதம் போன்ற சொற்களால் கவிதைகளைச் செய்பவர்களுடைய உயிர்கள் நற்கதி பெறுமாறு அருள்பவனே!

சரவணப் பொய்கையில் தோன்றிய என் செல்வமே!  ஆறுமுகனே! குருபரனே என்று மீண்டும் மீண்டும் உச்சரித்து, பாடல்களிலும் வசனங்களிலும் பயிலும் தமிழின் இனிமையிலே உருகுகின்ற அடியார்களைத் தொடரும் பிறப்பு - இறப்பு என்ற பிணி நீங்க வேண்டும்; அவர்கள் சிவப்பேற்றை அடைய வேண்டும்; அவர்களை நாடிவரும் நோய்கள் அவர்களைவிட்டுத் துள்ளிக் குதித்தோடி நீங்க வேண்டும்.  எங்கள் எல்லோருடைய உயிர்களும் சுகம்பெற்று நிலைபெற வேண்டும்.

கடல் சூழ்ந்த இந்த உலகத்திலே தோன்றுகின்ற சகலவிதமான உயிர்களும் படுகின்ற துன்பங்களும், அவற்றுள் நிகழும் கலகங்களும், அவை அடைகின்ற கலக்கங்களும் நீங்க வேண்டும்.  எல்லா உயிர்களும் ஒருநாள் உனது திருவடி நிழலின் கீழே நிலைபெற்று நற்கதியுற்ற நிற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.