பதச் சேதம் | சொற் பொருள் |
| கிறி மொழி கிருதரை பொறி வழி செறிஞரை கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வை | கிறி மொழி: பொய் பேசும்; கிருதர்: கர்வம் நிறைந்தவர்கள்; பொறிவழி: புலன்களின் வழியே; செறிஞர்: செல்பவர்; கெடுபிறப்பு: கெட்டதான இப் பிறப்பு; |
| கெடு மட குருடரை திருடரை சமய தர்க்கிகள் தமை செறிதல் உற்று அறிவு ஏதும் | சமய தர்க்கிகள்: சமயவாதிகள்; செறிதல் உற்று: நெருங்கிச் சென்று; |
| அறிதல் அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே | அறிதல் அற்று: அறிய மாட்டாமல்; அயர்தல் உற்று: தளரந்து; அவிழ்தல் அற்று: மனம் நெகிழ்வது இல்லாமல் (மனமாகிய மலர் மொட்டு அவிழ்ப்பதால் நெகிழ்ச்சி என்று பொருள்படுகிறது); அருகல் உற்று: குறைபாடு அடைந்து; கருக்கடல்: பிறவியாகிய கடலின்; ஊடே: இடையே; |
| அமிழ்தல் அற்று எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு அணுகிடப் பெறுவேனோ | அமிழ்தல் அற்று: மூழ்காமல்; எழுதல் உற்று: (கடலினின்று) மேலே எழுந்து; உயர்தல் உற்று: மேம்பாடு அடைந்து; |
| பொறி உடை செழியன் வெப்பு ஒழிதர பறி தலை பொறி இல சமணர் அத்தனை பேரும் | பொறியுடை: அறிவு நிறைந்த; செழியன்: (கூன்) பாண்டியன்; வெப்பு: ஜுரம்; பறிதலை: முடியைப் பறித்து நீக்கிய தலை; பொறிஇல: அறிவற்ற; |
| பொடி பட சிவ மண பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணிய புலவோனே | பொடிபட: அழிய; சிவமணப் பொடி: சிவமணம் கமழ்வதாகிய திருநீற்றை; திருப்புகலி: சீர்காழி; கவுணியப் புலவோனே: கவுணிய குலத்தைச் சேர்ந்த ஞான சம்பந்தனே! |
| தறி வளைத்து உற நகை பொறி எழ புரம் எரித்தவர் திருப் புதல்வ நல் சுனை மேவும் | தறி வளைத்து: அழிவு உண்டாகும்படி—அறுபட்டு; நகை: சிரிப்பு; பொறி எழ: தீப்பொறி பறக்க; |
| தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு செரு தணியினில் சரவண பெருமாளே. | தனி: ஒப்பற்ற; மலர்தரு: மலர்வதான; |

கிறி மொழிக் கிருதரைப் பொறி வழிச் செறிஞரை ... பொய்யுரை பேசும் செருக்கு நிறைந்தவர்களையும், (அறிவால் காக்கப்படாத) ஐம்புலன்கள் இழுக்கும் இழுப்பின் வழியெல்லாம் செல்பவர்களையும்;

கெடு பிறப்பு அற விழிக்கிற பார்வைக் கெடு மடக் குருடரைத் திருடரை ... தீயதாகிய இந்தப் பிறப்பு (நல்லதாக மாறிவிடாதபடி) அழியும்படியாக விழிக்கின்ற; அறிவாகிய பார்வை கெட்ட கண்ணற்றவர்களையும்; திருடர்களையும்;

சமய தர்க்கிகள் தமைச் செறிதல் உற்று அறிவு ஏதும் அறிதல் அற்று அயர்தல் உற்று அவிழ்தல் அற்று ... (நான்) சமயவாதிகளை அடைந்து; எதையும் அறிவால் அறிய முடியாமல் போய், தளர்ந்துபோய்; மனமாகிய மலர் மொட்டவிழ்ப்பதாகிய* நெகிழ்ச்சியே அற்றுப் போய்;

(* இதைத்தான் சீர்பாத வகுப்பில், “உரைஅவிழ; உணர்வுஅவிழ; உளம்அவிழ; உயிர் அவிழ” என்று ஒவ்வொரு அடுக்காக அவிழ்ந்து வரும் நிலையாகக் குறிக்கிறார்).

அருகல் உற்று அறவு(ம்) நெக்கு அழி கருக் கடல் ஊடே அமிழ்தல் அற்று ... குறைபாடு அடைந்து; மிகவும் கெட்டு, அழிவைத் தருவதாகிய பிறவியாகிய கடலுக்குள்ளே அமிழ்ந்துபோவது அற்றுப் போய்;

எழுதல் உற்று உணர் நலத்து உயர்தல் உற்று அடியிணைக்கு அணுகிடப் பெறுவேனோ ... (அந்தக் கடலில் அமிழாமல்) எழுந்து வர முனைந்து, நல்லுணர்வு பெற்று, மேம்பாடு அடைந்து, உன் திருவடி இணைக்கு அருகில் வரப் பெறுவேனோ.

பொறி உடைச் செழியன் வெப்பு ஒழிதரப் பறி தலைப் பொறி இலச் சமணர் அத்தனை பேரும் பொடி பட ... அறிவு நிறைந்தவனாகிய (கூன்) பாண்டியனுடைய வெப்புநோய் நீங்கும்படியும்; முடியைப் பிடுங்கிக் களைபவர்களான அறிவற்ற சமணர்கள் அத்தனை பேரும் அழியும்படியும்;

(முடியை மழித்து நீக்காமல் பறித்து நீக்குவது சமணருடைய வழக்கம்)

சிவ மணப் பொடி பரப்பிய திருப் புகலியில் கவுணியப் புலவோனே ... சிவமணம் கமழ்வதான திருநீற்றை (மதுரையிலே) பரப்பியவரும்; சீர்காழியில் கவுணியர் குலத்தில் உதித்தவருமான ஞான சம்பந்த மூர்த்தியாக அவதாரம் செய்த புலவனே!

தறி வளைத்து உற நகைப் பொறி எழப் புரம் எரித்தவர் திருப்புதல்வ ... அறுபடுவதால் அழிவு உண்டாகும்படி அட்டஹாசச் சிரிப்பால் தீப்பொறி பறக்க, அந்தச் சிரிப்பாலேயே திரிபுரங்களை எரித்தவரான சிவபெருமானுடைய திருப்புதல்வனே!

நல் சுனை மேவும் தனி மணக் குவளை நித்தமும் மலர் தரு ...நல்ல சுனையில் உள்ள ஒப்பற்ற நறுமணத்தைக் வீசுகின்ற குவளை மலர் நாள்தோறும் மலர்வதான,

செருத்தணியினில் சரவணப் பெருமாளே. ... போரின் உக்கிரம் தணிந்த தலமான திருத்தணியில் (வீற்றுள்ள) சரவணப் பெருமாளே!

சுருக்க உரை

கூன்பாண்டியனைப் பீடித்த வெப்பு நோய் (ஜுரம்) நீங்கவும்; முடியைப் பறித்துக் களையும் தலையை உடைய சமணர்கள் அழியவும் சிவமணம் கமழ்வதான திருநீற்றைப் பரப்பிய (சைவத்தைப் பரப்பிய) கவுணியப் புலவனான திருஞான சம்பந்த மூர்த்தியாக அவதரித்தவனே! சிரித்தே புரம் எரித்தவரான சிவபெருமானுடைய திருக்குமரனே! நறுமணம் கமழும் ஒப்பற்ற குவளை மலர்கள் சுனையிலே நாள்தோறும் மலர்வதான திருத்தணிகையில் வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே!

பொய்பேசும் கர்விகளும்; ஐம்புலன்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் செல்பவர்களும்; இந்தப் பிறவி நன்மையை அடைய ஒட்டாமல் விழிக்கும் விழியை உடைய அறிவுக் குருடர்களும், திருடர்களுமான சமயவாதிகளை நான் அடைந்து; (அவர்களுடைய தொடர்பால்) அறிவால் எதையும் உணரமுடியாத நிலையை அடைந்து, தளர்ச்சியுற்று அழிந்து போவது நீங்க வேண்டும்; அடியேன் மேம்பட வேண்டும்; உன்னுடைய திருவடியைப் பெற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை