பதச் சேதம் | சொற் பொருள் |
| தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை | அரை: இடுப்பு; சிவந்த துணி: காவித் துணி; |
| சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு | சதிரொடு: பெருமையோடு; விரகொடு: சாமர்த்தியத்தோடு; ஒரு சத்தத்து அறிந்து: ஒலிக்கின்ற குறிப்பை மட்டுமே அறிந்து; |
| கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே | கரண வலைக்குள்: புலன்களின் வலைக்குள்; நிலைக்கைக்கு: நிலைமைக்கு; |
| கனக(ம்) இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே | கனகம்: பொன்; இயற்றி: ரசவாதத்தால் செய்து; எனை சற்று அறிந்து: என்னைச் சற்றே கவனித்து; |
| அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை | கொக்கு: மாமரம்; அரிந்து: வெட்டி; அரு வரையை: அரிதான கிரெளஞ்ச மலையை; பொட்டு எறிந்து: தூளடித்து; உயர் ஆனை: பெருமை வாய்ந்த தேவசேனை அம்மைக்கு; |
| அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே | அருணகிரி புக்கு: திருவண்ணாமலையில் புகுந்து; |
| மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் | மலையை வளைத்து: மேரு மலையை வில்லாக வளைத்து; பறந்து மருவு புரத்தை: பறக்கும் சக்தியுள்ள திரிபுரங்களை; சிவந்து: கோபித்து; வறிது: சிறிதே; நகைத்திட்டு: சிரித்த; |
| மதலை புனத்தில் புகுந்து நர வடிவு உற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே. | புனம்: தினைப் புனம்; நரவடிவுற்று: மனித வடிவம் கொண்டு; மற மயிலை: வேடர் குலத்துப் பெண்ணை; சுற்றிவந்த: கவர்ந்து வந்த; |

தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து... தலையை மொட்டையடித்துக் கொண்டும்; காவித் துணியை இடுப்பில் தரித்துக் கொண்டும்;

சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை ... சடையை வளர்த்துக் கொண்டும்; புலித்தோல் ஆடையை,

சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து ... பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்து கொண்டும்; சாமர்த்தியமாக புதியபுதிய கலைகளைக் கற்கத் தொடங்கியும்;

தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு அணிந்து ... தவம் என்ற சொல்லை உச்சரிப்பதைத் தவிர அதன் பொருளை உணராமல், உடல் முழுக்கத் திருநீற்றைப் பூசிக்கொண்டும்;

கரண வலைக்குள் புகுந்து ... புலன்கள் விரித்திருக்கும் வலைக்குள் தெரிந்தே புகுந்து அகப்பட்டுக் கொண்டும்;

கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே ...கதறி துக்கப்படும் நிலைக்கு ஆட்பட்ட லட்சணத்தில்;

கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து ... ரசவாதத்தால் பொன்னைச் செய்து அலைந்து சோர்ந்துகிடக்கும் என்னையும் சற்றே கவனித்து;

கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே ... என் கவலைகளை அழிப்பதற்காக எனக்கு இரக்கப்பட்டு அருளவேண்டும்.

அலை கடலில் கொக்கு அரிந்தும் ... அலைவீசும் கடலிலே மாமரமாக நின்ற சூரபதுமனைப் பிளந்தும்;

அரு வரையைப் பொட்டு எறிந்தும் ... அரிய கிரெளஞ்ச மலையைத் தூளடித்தும்;

அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை ... தேவலோகத்தில்புகுந்தும்; பெருமை நிறைந்த தேவானையம்மையைக்கு,

அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் ... அருள்புரிந்து, கைப்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருந்தும்;

அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே ... ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!

மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து ... மேருமலையை வில்லாக வளைத்து; பறக்கும் சக்தியுடைய திரிபுரங்களைச் சினந்து;

வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை ... சிறிய புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனே!

புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து ... தினைப்புனத்துக்குள் நுழைந்து, அங்கே மனிதவேடம் தரித்து, வள்ளியின்மேல் காதலாகித் திரிந்து,

மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே. ... வேடர்குலத்து மயிலான அவளை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே!

சுருக்க உரை

அலைவீசுகின்ற கடலில் மாமரமாக நின்ற சூரபதுமனைச் சாய்த்தவனே! கிரெளஞ்ச மலையைத் தூளடித்தவனே! தேவலோகத்தில் புகுந்து, தேவானையம்மைக்கு அருள்புரிந்து அவளைக் கரம்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருப்பவனே! ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!

தலையை மொட்டையடித்துக்கொண்டும்; காவியாடையைத் தரித்துக் கொண்டும்; சடையை வளர்த்துக்கொண்டும்; புலித்தோல் ஆடையைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்துகொண்டும்; எதையெதையோ கற்க முயன்றுகொண்டும்; தவம் என்பதன் பொருளறியாமல் வெறும் ஒலிக்குறிப்பாக மட்டுமே அறிந்துகொண்டும்; உடல்முழுதும் திருநீற்றைப் பூசிக்கொண்டும்; தெரிந்தே புலன்கள் விரித்த வலைக்குள் விழுந்து வேதனை அடைகின்றவனும்; இரசவாதத்தால் பொன்னை உண்டாக்கிக்கொண்டு திரிகின்றவனுமாகிய என்மீது சற்றே இரக்கம்கொண்டு என் கவலைகளை நீக்கி என்னை ஆட்கொண்டு அருள்வாயாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை