பிரமபுரம் என்னும் பெயருடைய சீர்காழித் திருத்தலத்துக்கான திருப்புகழ் இது.
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை – மறவேனே
என்று ‘பக்கரை விசித்ரமணி’ பாடலில் சொன்னதுபோலவே, இதிலும் உன்னுடைய பெருமையைப் பாடித் துதிப்பதை ஒருநாளும் மறவேன் என்று சொல்கிறார். இறைவனைத் துதிப்பது, துதிப்பதற்காகவே. துதித்தலின் பயன் துதிப்பதால் ஏற்படும் இன்பமே என்தைச் சொல்லும் பாடல் இது.
இந்தப் பாடலின் மூன்றாவது அடியான ‘கருதி இலங்கை அழிந்து விழும்படி’ என்பதில் தொடங்கி நான்காவது அடியின் முதல் பாதியான ‘அம்பு கை தொடும் மீளி’ என்பது வரையில் நெடுகிலும் திருமாலின் அவதாரங்களையும் பல்வேறு அருள்திறங்களையும் பேசுகிறார். ராமன், கஜேந்திர மோட்சம், ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் முகுந்தன், சகடாசுரனை எட்டி உதைக்கவும், மருதமரங்களைச் சாய்க்கவும் செய்த கண்ணன், வாமனன் கடல் கலங்கும்படி அம்பை எய்த (மீண்டும் ராமன், சேதுபந்தனத்தின்போது) திருமால் என்று வரிசையாகத் திருமாலைப் பாடுகிறார். இதில் வருகின்ற சிகண்டிக்கும், மஹாபாரதத்தில் பீஷ்மர் விழத் துணைநின்ற சிகண்டிக்கும் தொடர்பில்லை. சிகண்டி என்றால் மயில் என்று பொருள்.
பாடலின் அமைப்பைப் பாருங்கள். முற்றிலும் குறிலெழுத்துகளால் ஆன பாடல். ஒவ்வோரடியிலும் கடைசிச் சீரின் மூன்றாவது எழுத்து மட்டுமே நெடில். (பெருமாளே என்பதில் மூன்றாவது எழுத்து நெடில் என்பதைப் போல). எல்லா மெய்யெழுத்துகளும் மெல்லினம். அபாரமான சந்தக் கலவை இந்தப் பாடல்.
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன
தனதன தந்தன தந்தன தந்தன - தனதான
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு
சமயமு மொன்றிலை யென்றவ ரும்பறி
தலையரு நின்றுக லங்கவி ரும்பிய - தமிழ்கூறுஞ்
சலிகையு நன்றியும் வென்றியு மங்கள
பெருமைக ளுங்கன முங்குண மும்பயில்
சரவண மும்பொறை யும்புக ழுந்திகழ் - தனிவேலும்
விருதுது லங்கசி கண்டியி லண்டரு
முருகிவ ணங்கவ ரும்பத மும்பல
விதரண முந்திற முந்தர முந்தினை - புனமானின்
ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்தடி
வருடிம ணந்துபு ணர்ந்தது வும்பல
விஜயமு மன்பின்மொ ழிந்துமொ ழிந்தியல் - மறவேனே
கருதியி லங்கைய ழிந்துவி டும்படி
அவுணர டங்கம டிந்துவி ழும்படி
கதிரவ னிந்துவி ளங்கிவ ரும்படி - விடுமாயன்
கடகரி யஞ்சிந டுங்கிவ ருந்திடு
மடுவினில் வந்துத வும்புய லிந்திரை
கணவன ரங்கமு குந்தன்வ ருஞ்சக - டறமோதி
மருதுகு லுங்கிந லங்கமு னிந்திடு
வரதன லங்கல்பு னைந்தரு ளுங்குறள்
வடிவனெ டுங்கடல் மங்கவொ ரம்புகை - தொடுமீளி
மருகபு ரந்தர னுந்தவ மொன்றிய
பிரமபு ரந்தனி லுங்குக னென்பவர்
மனதினி லும்பரி வொன்றிய மர்ந்தருள் - பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/256451835&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

