ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 370

இந்தப் பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது. 

Updated On :5 அக்டோபர் 2016, 11:58 am


இறைவனைத் தனது திருவடியைத் தருமாறு கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.  நேற்றைய பாடலில் நிரைநேர் நேர்நேர் என்ற அமைப்பில் வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்து வந்ததைப் பார்த்தோம். இன்றைய பாடலும் இரண்டிரண்டு அசைகளைக் கொண்ட சீர்களால் ஆனது.

(தொங்கல்சீர் எப்போதும் மூன்றசை.)  தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனதான என்ற அமைப்பில் நேர்நேர் அசைகளைக் கொண்ட பாடல்களைப் பார்த்திருக்கிறோம்.  இன்றைய பாடல் முழுக்க முழுக்க மெல்லொற்றுகளால் ஆனது.

அடிக்கு ஒற்றுநீக்கி 16 எழுத்துகள்; ஒவ்வொரு சீரின் இரண்டாம் எழுத்தும் நெடில்; ஒற்று சேர்த்து ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று.  ஒவ்வொரு அடியிலும் ஆறாம் சீரின் கடைசி எழுத்து வல்லொற்று. பாடலைப் பார்ப்போம்.

தந்தா னந்தா தந்தா னந்தா
      தந்தா னந்தா - தனதானா
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்  
         தண்டார் மஞ்சுக் - குழல்மானார்
      தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
         சம்பா வஞ்சொற் - றடிநாயேன்
மண்டா யந்தீ மென்கால் விண்டோய்
         வண்கா யம்பொய்க் - குடில்வேறாய்
      வன்கா னம்போ யண்டா முன்பே
         வந்தே நின்பொற் - கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
         கொன்றாய் வென்றிக் - குமரேசா
      கொங்கார்  வண்டார் பண்பா டுஞ்சீர்
         குன்றா மன்றற் - கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
         கண்டா கந்தப் - புயவேளே
      கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
         கந்தா செந்திற் - பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.