ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 372

இப்பாடல் ராஜபுரம் என்ற தலத்துக்கானது. 

Updated On :7 அக்டோபர் 2016, 6:30 pm


 
இப்பாடல் ராஜபுரம் என்ற தலத்துக்கானது.  தற்காலத்தில் இது ராசிபுரம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.  கிடைத்தற்கரிய ஆற்றல்கள் வாய்க்கப்பெற்றிருந்தாலும் மக்கள் அவற்றையெல்லாம் அற்பமான செயல்களிலும் முயற்சிகளிலும் செலவிட்டு அழிகிறார்கள்.  அரிதிலும் அரிதான கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர் அதனை நரஸ்துதியில் வீணே செலவிட்டு பிறப்பையே வீணடித்துக் கொள்கிறார்கள் அல்லவா, அதுபோல.  நரஸ்துதியில் விழுந்து அழியாமல் இருக்கும் பேற்றை இந்தப் பாடல் கோருகிறது.
 
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகள்; 3, 11, 19 ஆகிய எழுத்துகள் (எட்டெழுத்து இடைவெளியில்) நெடில், மற்றவை குறில்.  ஒற்றைச் சேர்த்து 2, 10, 18 (எட்டெழுத்து இடைவெளியில்) ஆகிய எழுத்துகள் மெல்லொற்று; 8, 18, 28 (பத்தெழுத்து இடைவெளியில்) ஆகியவை வல்லொற்று.
 
தந்த தானன தத்தன தந்த தானன தத்தன
      தந்த தானன தத்தன                தனதான
 
சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
         தண்டு மாகரி பெற்றவன்     -    வெகுகோடிச்
      சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ர வாதிச துர்க்கவி
         சண்ட மாருத மற்றுள        -    கவிராஜப்
பங்கி பாலச ரச்வதி சங்க நூல்கள்வி தித்தப்ர
         பந்த போதமு ரைத்திடு        -   புலவோன்யான்
      பண்டை மூவெழு வர்க்கெதிர் கண்ட நீயுமெ னச்சில
         பஞ்ச பாதக ரைப்புகழ்          -  செயலாமோ
வெங்கை யானை வனத்திடை துங்க மாமுத லைக்குவெ
         ருண்டு மூலமெ னக்கரு       -   டனிலேறி
      விண்ப ராவஅ டுக்கிய மண்ப ராவஅ தற்குவி
         தம்ப ராவஅ டுப்பவன்         -   மருகோனே
கொங்க ணாதித ரப்பெறு கொங்கி னூடுசு கித்திடு
         கொங்கின் வீரக ணப்ரிய       -   குமராபொற்
      கொங்கு லாவுகு றக்கொடி கொங்கை யேதழு விச்செறி
         கொங்கு ராஜபு ரத்துறை         - பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.