ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 376

இப்பாடல் திருவிடைமருதூர் தலத்துக்கானது.

Updated On :11 அக்டோபர் 2016, 6:30 pm

இப்பாடல் திருவிடைமருதூர் தலத்துக்கானது.  ‘தவநெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம் சிந்தியாதோ’ என்று இதயத்தை நன்னெறியில் நிறுத்தி இறைவனிடத்தில் உள்ளம் நிலைகொண்டு நிற்கும் பேற்றைக் கேட்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்த மற்ற சீர்கள் எதிலும் நெடில் பயிலவில்லை; ஒற்று சேர்த்து ஒவ்வொரு மடக்கிலும் 12, 15, 17, 20 ஆகிய எழுத்துகள் மெல்லொற்று

தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
   தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
   தனனதன தனனதன தந்தனந் தந்தனந்        தந்ததான

படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
      தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
      பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் - செம்பொன்மேனிப்
   பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
      திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
      பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் - துன்றுமூலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
      குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
      சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென - றுய்ந்துபாடித்
   தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
      பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
      தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் - சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
      பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
      கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ்சம்ப்ரமங் - கண்டுசேரக்
   கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
      றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
      கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் - துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
      பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
      கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனம் - தங்குமார்பா
   அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
      கருணைபொழி வனகழிலி லந்தமுந் தம்பமென்
      றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் தம்பிரானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.