ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 358

கடைசிக் காலத்துக்கு ஒரு பொருளும் துணைக்கு வராது

Updated On :8 செப்டம்பர் 2016, 12:23 pm

பிறருக்குப் பகிர்ந்தளித்தல், தானத்தைக் கைக்கொள்ளல் என்ற அறத்தை நெடுகிலும் போற்றியவர் அருணகிரிநாதர். 

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா உடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.

என்றார் கந்தரலங்காரத்தில்.  ‘கூர்மையுடன் பிராகசிக்கின்ற வடிவேலனை வாழ்த்தி, உண்ணும் உணவில் ஒரேயொரு நொய்யரிசியையாவது வறியோர்க்குப் பகிர்ந்து கொடுத்து உண்ணுங்கள்.  இதுவோ, வெய்யிலுக்கு ஒதுங்க நிழலும் தரமுடியாத உடல்.  இந்த உடலைச் சுமந்துகொண்டு பொருளாசை கொண்டு திரிதல் வேண்டாம்;  கடைசிக் காலத்துக்கு ஒரு பொருளும் துணைக்கு வராது’ என்று ‘காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே’ என்ற பட்டினத்தாரின் பாடலை ஒத்த கருத்தைப் பல இடங்களில் வலியுறுத்துவார்.  அதைத்தான் இன்றைய பாடலிலும் காண்கிறோம்.  எளிய சந்த அமைப்பு; சிறிய பாடல்.

இந்தப் பாடல் திலதைப்பதி என்ற தலத்துக்கானது.  தற்காலத்தில் ‘கோயிற்பத்து’ என்ற பெயரில் வழங்கப்படும் இத்தம், திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது; தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஊர் இது.

தனனத் தனனா தனதான 
 

இறையத் தனையோ                      அதுதானும்

      இலையிட் டுணலேய்               தருகாலம்

அறையிற் பெரிதா                         மலமாயை

      அலையப் படுமா                    றினியாமோ

மறையத் தனைமா                        சிறைசாலை

      வழியுய்த் துயர்வா                  னுறுதேவர்

சிறையைத் தவிரா                        விடும்வேலா

      திலதைப் பதிவாழ்                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.