ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 360

இறைவனை ஞானோபதேசம் செய்வித்து அருளும்படிக்

Updated On :9 செப்டம்பர் 2016, 10:02 am

பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இது, இறைவனை ஞானோபதேசம் செய்வித்து அருளும்படிக் கேட்டுக்கொள்கிறது.

பாடலின் அமைப்பு பெரும்பாலும் நெடிலோசையால் அமைந்துள்ளது.  அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகள்; 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20 ஆகிய எழுத்துகள் (தொங்கல் சீர் இல்லாமல்) நெடில்; மற்ற எழுத்துகள் குறில்; ஒற்று சேர்த்து 7, 15, 23 ஆகிய எழுத்துகள் வல்லொற்று.  பாடலைப் பார்ப்போம்.

தானன தானதாத்த தானன தானதாத்த
      தானன தானதாத்த                  தனதான

பாதக மானயாக்கை வாதுசெய் பாவிகோத்த
        பாணமும் வாளுமேற்ற           இருபார்வை

      பாரப டீரமாப்ப யோதர மாதர்வாய்த்த

         பாயலின் மீதணாப்பி             யிதமாடுந்

தோதக மாயவார்த்தை போதக மாகநோக்கு

         தூய்மையில் நாயினேற்கும்      வினைதீரச்

      சூழுமு னாதிநீத்த யானொடு தானிலாச்சு

         கோதய ஞானவார்த்தை          யருள்வாயே

சாதன வேதநூற்பு ராதன பூணநூற்ப்ர

         ஜாபதி யாண்மைதோற்க          வரைசாடிச்

      சாகர சூரவேட்டை யாடிய வீரவேற்ப்ர

         தாபம கீபபோற்றி                யெனநேமி

மாதவன் மாதுபூத்த பாகர னேகநாட்ட

         வாசவ னோதிமீட்க              மறைநீப

      மாமலர் தூவிவாழ்த்த யானையை மாலைசூட்டி

         வானவர் சேனைகாத்த           பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.