ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பதச் சேதம்

சொற் பொருள்

இறை அத்தனையோ அது தானும் 

 

இறை: அணு அளவு; இறையத்தனையோ: அணு அளவேணும்;

இ(ல்)லை இட்டு உணல் ஏய் தரு காலம்

 

இட்டு உணல்: பிறருக்கு இட்டபின் உண்ணுதல்; ஏய்தரு: இயைந்து இருந்த, இவ்வாறிருந்த (எனவே வீணான);

அறையில் பெரிதாம் மல மாயை

 

அறையில்: சொல்லப் புகுந்தால்; மல மாயை: மும்மலங்களாலும் மாயையாலும்;

அலையப் படும் ஆறு இனி ஆமோ

 

அலையப்படும்: அலைக்கழிக்கப்படும்; ஆறு: வழி, நெறி, முறை;

மறை அத்தனை மா சிறை சாலை

 

மறை: வேதம்; அத்தனை: தலைவனை (மறைஅத்தனை: பிரமனை);

வழி உய்த்து உயர் வான் உறு தேவர்

 

வழி உய்த்து: போகச் செய்து;

சிறையை தவிரா விடும் வேலா

 

தவிராவிடும்: தவிர்த்துவிடும், விடுவிக்கும்;

திலதைப் பதி வாழ் பெருமாளே.

 

 

இட்டுணல் ஏய்தருகாலம்... பிறருக்கு இட்டபின்னர் தான் உண்பது என்ற (நற்குணம் என்னிடம்) இயைந்து நின்ற காலத்தின் அளவு,

இறையத்தனையோ அதுதானும் இலை... அணுவின் அளவுகூட இருந்ததில்லை.

அறையிற் பெரிதாம்... (இவ்வாறு வீணே கழித்த காலத்தை நான்) சொல்லப் புகுந்தால், நீண்டகாலம்தான்.

மலமாயை அலையப் படுமாறு இனியாமோ... (ஆணவ, கன்ம, மாயா) மலங்களும் மாயையும் என்னை (இவ்வாறு) அலைக்கழித்த இந்த அளவிலே போதும்.

மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து...வேதத்தை ஓதிய தலைவனான பிரமனை பெரிய சிறைக்குள்ளே போகும்படியாகச் செய்து,

உயர்வானுறு தேவர்... வானிலுள்ள உயர்ந்த தேவர்களை,

சிறையைத் தவிரா விடும்வேலா... சிறையிலிருந்து விடுவித்த வேலனே!

திலதைப் பதிவாழ் பெருமாளே.... திலதைப்பதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை:

வேதத்தை ஓதிய தலைவனான பிரமனைப் பெரிய சிறைக்குள்ளே அனுப்பியவனே!  தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்தவனே!  திலதைப்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மற்றவர்களுக்கு இட்டபிறகு உண்ணும் நன்னெறி என்னிடத்திலே அணுவளவேனும் இருந்ததில்லை.  சொல்லப்போனால் நான் இவ்வாறு கழித்து வீணான காலத்துக்கு அளவே இல்லை.  ஆணவ, கன்ம, மாயா மலங்களாலும் மாயையாலும் நான் இதற்குமேலும் அலைக்கழிக்கப்படாமல் காத்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.