ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

பகுதி - 624

இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது

News image
Updated On :8 ஆகஸ்ட் 2017, 6:10 am

‘சிவகதியைப் பெறவேண்டும்’ என்று கோருகிற இந்தப் பாடல் திருவொற்றியூருக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் நான்காவது எழுத்தாக வரும் கணக்கில் சேராத வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கு எழுத்துகளும் அமைந்துள்ளன. 

தனதத்தன தானதன தனதத்தன தானதன
      தனதத்தன தானதன தனதானா

சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
         சுகவிப்பிர தேசரச சுபமாயா

துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
         தொகைவக்ரம மாதர்வயி றிடையூறு

கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
         களையெத்திடி ராகவகை யதின்மீறிக்

கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
         கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ

குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
         பிடிகைத்தல ஆதியரி மருகோனே

குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
         குணமுட்டர வாவசுரர் குலகாலா

திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
         யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா

திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
         ளிதயத்திட மேமருவு பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.