ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

நற்கதியைக் கோரும் இப்பாடல் பழனிக்கானது. அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒவ்வொரு அடி, மடக்கடியிலும் பயிலும் மூன்று சீர்களிலும் சமமாக ஐந்து ஐந்து எழுத்துகள் அமைந்துள்ளன.  இந்த ஐந்தெழுத்துகளும் குறிலெழுத்துகள்; ஒவ்வொரு சீரும் ஒரு வல்லொற்றோடு முடிவடைகிறது. 

தனதனதத் தனதனதத்
                             தனதனதத் தனதான

திடமிலிசற் குணமிலிநற்
                            றிறமிலியற் புதமான

செயலிலிமெய்த் தவமிலிநற்
                            செபமிலிசொர்க் கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற்
                            கியல்பிலிநற் றழிழ்பாட

இருபதமுற் றிருவினையற்
                            றியல்கதியைப் பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக்
                           கிளைமடியப் பொரும்வேலா

கிரணகுறைப் பிறையறுகக் 
                           கிதழ்மலர்கொக் கிறகோடே                       

படர்சடையிற் புனைநடனப்
                           பரமர்தமக் கொருபாலா

பலவயலிற் றரளநிறைப் 
                           பழநிமலைப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.