ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ஆசை அறவேண்டும் என்று கோருகின்ற இந்தப் பாடல் விராலி மலைக்கானது.  மூன்றாவது அடியில் ‘இராவண’ என்று மூன்று முறை பயின்றாலும், ஒவ்வொரு முறையும் பொருள் மாறும்படி அமைந்திருக்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான அனைத்துச் சீர்களிலும் ஒரேவிதமான அமைப்பைக் கொண்ட ‘குறில்-நெடில்-குறில்-குறில்’ என்ற நான்கெழுத்துகளைக் கொண்டவை.  ஆறாவது சீரில் மட்டும் கணக்கில் சூராத வல்லொற்று ஒன்று கூடுதலாகப் பயில்கின்றது.

தனாதன தனாதன தனாதன தனாதன
      தனாதன தனாதனத் தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத
      நிராகுல சிராதிகப் ப்ரபையாகி

நிராசசி வராஜத வராகர்கள் பராவிய
       நிராயுத புராரியச் சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
       சொரூபமி வராதியைக் குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
       துரோகரை தராசையுற் றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
      இராவண இராஜனுட் குடன்மாய்வென்

றிராகன் மலாரணிஜ புராணர்கு மராகலை
      யிராஜசொ லவாரணர்க் கிளையோனே 

விராகவ சுராதிப பொராதுத விராதடு
      விராயண பராயணச் செருவூரா

விராவிய குராவகில் பராரைமு திராவளர்
     விராலிம லைராஜதப்  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.