‘உன்னுடைய கழலைத் தொழும் இயல்பைத் தந்தருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணா மலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.
தனதன தனனந் தனதன தனனந் தனதன
தனனந் தனதான
விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு
விழிவெங் கனல்போல
வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி
வழிவந் திடுபோதிற்
கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற
வினர்கண் புனல்பாயுங்
கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு
மியல்தந் தருள்வாயே
பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர
வணைகண் டுயில்மாலம்
பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற
விடமுண்டெருதேறி
அரவொடு மதியம் பொறிசடை மிசைகங் கையுமுற
அனலங் கையில்மேவ
அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில்
மருவும் பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


