‘உன் வலிமையை என்றும் மறவேன்’ என்று நன்றி பாராட்டுகிற இப்பாடல் விராலி மலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன
தானாத்தன தான தனதன தனதான
காமாத்திர மாகி யிளைஞர்கள்
வாழ்நாட்கொடு போகி யழகிய
காதாட்டிய பார இருகுழை யளவோடிக்
கார்போற்றவ ழோதி நிழல்தனி
லார்வாட்கடை யீடு கனகொடு
காலேற்றுவை வேலின் முனைகடை யமதூதர்
ஏமாப்பற மோக வியல்செய்து
நீலோற்பல ஆசில் மலருட
னேராட்டவி நோத மிடும்விழி மடவார்பால்
ஏகாப்பழி பூணு மருளற
நீதோற்றிமு னாளு மடிமையை
யீடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே
சீமாட்டியு மாய திரிபுரை
காலாக்கிரி கோப பயிரவி
சீலோத்தமி நீலி சுரதிரி புவநேசை
சீகார்த்திகை யாய அறுவகை
மாதாக்கள்கு மார னெனவெகு
சீராட்டொடு பேண வடதிசை கயிலாசக்
கோமாற்குப தேச முபநிட
வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
கோதாட்டிய ஸ்வாமி யெனவரு மிளையோனே
கோடாச்சிவ பூஜை பவுருஷ
மாறாக்கொடை நாளு மருவிய
கோனாட்டுவி ராலி மலையுறை பெருமாளே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


