
நேரடி அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை இம்மாத இறுதிவாக்கில் தாம் முடிவு செய்யப்போவதாக ராஜிவ் காந்தி கூறினார்.
தற்போது ராஜிவ் காந்தி, தொடர்ந்து விமான ஓட்டியாகப் பணிபுரிகிறார்.
ஒரு பேட்டியில் அவர், அரசாங்கப் பதவிகளில் தமக்கு நாட்டம் இல்லை என்று கூறினார். ஆனால், கட்சியைப் பலப்படுத்துவதற்காக அதில் சேருவதை விரும்பலாம் என்றார்.
லோகசபை உபதேர்தல்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வருவதால் விரைவில் தாம் ஒரு முடிவு எடுக்கவேண்டி இருக்கிறது என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுவீர்களா அல்லது வேறு தொகுதியிலா என்று கேட்டதற்கு, இது பற்றியெல்லாம் கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன் என்று அவர் பதில் அளித்தார்.
ஆனால், தாம் இன்னும் அரசியலில் சேருவது குறித்து முடிவு எதுவும் செய்யவில்லை என்பதை அவர் மீண்டும் சொன்னார்.
மற்றும் ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், தம்முடைய தம்பி சஞ்சய் காந்தி, தமது அன்னையின் சிறிய பிரச்னைகளைக் கவனித்து வந்ததாகவும், பெரிய பிரச்னைகளில் தமது அன்னையே மூழ்கி இருப்பதாகவும் சொன்னார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.