27.08.1965 - பீட்டில்ஸ் இசைக்குழுவும் எல்விஸ் ப்ரஸ்லீயும் கை  கோர்த்த நாள் 

பீட்டில்ஸ் என்பது 1960 ஆம் ஆண்டில், நான்கு இளைஞர்கள் சேர்ந்து லண்டனின் லிவர்பூல் நகரில் துவக்கிய ஒரு ராக் இசைக்குழுவாகும்.
27.08.1965 - பீட்டில்ஸ் இசைக்குழுவும் எல்விஸ் ப்ரஸ்லீயும் கை  கோர்த்த நாள் 
Updated on
1 min read

பீட்டில்ஸ் என்பது 1960 ஆம் ஆண்டில், நான்கு இளைஞர்கள் சேர்ந்து லண்டனின் லிவர்பூல் நகரில் துவக்கிய ஒரு ராக் இசைக்குழுவாகும். பொதுமக்கள் இசையாக அறியப்பட்டிருந்த ராக் இசையை  பின்னாட்களில் வணிகத் தளத்திலும் மாபெரும் வெற்றியடையச் செய்தவர்கள் பீட்டில்ஸ் இசைக்குழுவினர் ஆவார்கள்.    

அதேபோல் அமெரிக்காவின் மிஸிசிப்பி மாகாணத்தில் 1935 ஆம் ஆண்டு  பிறந்தவர் எல்விஸ் ப்ரஸ்லீ. இசை மீது கொண்ட ஆர்வத்தில், அந்த சமயத்தில் நிலவிய சமூக மற்றும் நிறவெறி தடைகள் அனைத்தையும் தாண்டி, 'ராக் அண்ட் ரோல்' இசை வடிவத்தின் முடிசூடா அரசனாக விளங்கியவர்.

இவர்களிருவரும் 1965 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 27 ஆம் தேதி,   பீட்டில்ஸ் இசைக்குழுவின் அமெரிக்கப் பயணத்தின் பொழுது ஒன்றாக இணைந்து இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றனர். இதுவே முதலும் கடைசியான நிகழ்ச்சி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com