22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று!

சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் 22.12.1666 அன்று பீகாரில் பாட்னாவில் பிறந்தவர். 
22.12.1666: சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த் சிங் 22.12.1666 அன்று பீகாரில் பாட்னாவில் பிறந்தவர்.  இவர் ஓன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகன்; இவரது தாயார் பெயர் மாதா குஜ்ரி ஆவார்.

இவர் இளமையிலேயே அரபி, பெர்சியன், சமற்கிருதம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். மேலும் குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதிலும்  சிறப்புப் பெற்று விளங்கினார்.

1675 முதல் தனது இறப்பு வரை சீக்கியரின் குருவாக இருந்தார். மொகாலயப் பேரரசர் அவுரங்கசீப்புடனான சீக்கியரின் மதப்போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களையும் இழந்தார். சீக்கிய மதத்தவரின் பத்து குருக்களில் பத்தாவது குருவானவர். மேலும் அவர்களது கடைசி மனித குருவும் இவரே ஆவார்.

குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந் சிங் அகற்றினார். இவரது மறைவிற்கு பிறகு, இவரது வேண்டுகோளின் படி, சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.]

குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான 'தஸ' எனும் பாகத்தை இவரே எழுதினார்.   மாவார்.இவரே பிற்காலச் சீக்கிய மதக் கோட்பாடுகளுக்கு வித்திட்டவர் ஆவார். சீக்கிய ராமாயணம்,மகாபாரதம் ஆகியவற்றின் சில பகுதிகளும், சண்டி சரிதர்,பகவதி தீவார், ராம் அவதார்,துர்க ஸப்தஸதி ஆகிய இந்து நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிப் பெயர்த்தார்

எதிரிகளிடமிருந்து சீக்கியர்களைக் காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயமாக சீக்கியத்தை மாற்றினார். அவ்வமைப்பிற்கு தூய்மை என்னும் பொருள்படும் கல்ச என்று பெயர் சூட்டினார். இவ்வமைப்பில் சேருபவரை அகாலி என்று அழைத்தார். அகாலி என்பதற்கு இறவாதவன் என்று பொருள். கடவுளின் சார்புள்ளவானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார்

இறுதியாக இவர் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாண்டெட் என்னும் இடத்தில் அக்டோபர் 7, 1708இல் மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com