25.12.1968: தமிழ்நாட்டில் கீழ்வெண்மணிப் படுகொலை சம்பவம் நிகழ்ந்த தினம் இன்று!

கீழ்வெண்மணி என்பது தமிழ்நாட்டில், ஒன்றினைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள சிறு கிராமமே ஆகும்.
25.12.1968: தமிழ்நாட்டில் கீழ்வெண்மணிப் படுகொலை சம்பவம் நிகழ்ந்த தினம் இன்று!
Updated on
1 min read

கீழ்வெண்மணி என்பது தமிழ்நாட்டில், ஒன்றினைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள சிறு கிராமமே ஆகும். இங்கு கூலி உயர்வு கேட்டு போராடிய தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அப்பாவி விவசாயிகளும் , அவர் தம் குடும்பங்களை சேர்ந்த 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 வேளாண் தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட படுகொலை நிகழ்வாகும்.

தஞ்சை மண்ணில் "பண்ணையாள் முறை" ஆழமாக வேரூன்றியிருந்த காலமாக அது இருந்தது. தம் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுக்கும் விவசாயிகளுக்கு, நிலச்சவான்தாரர்கள் சாணிப்பால், சாட்டையடி போன்ற தண்டனைகளை வழங்குவது என்பதெல்லாம் சர்வ சாதாரணமான தண்டனைகளாக இருந்தன .

இதனால் ஆத்திரமடைந்த கம்யூனிஸ்ட் தலைவர்களான மணியம்மையும் பி. சீனிவாசராவ்வும் விவபாஷையா தொழிலாளர்களுக்கு  சங்க உணர்வை உருவாக்கினார்கள். விவசாயிகள் பலரும் ஒன்று சேர்ந்து விவசாயிகள் சங்கத்தை உருவாக்கினார்கள். நிலச்சுவான்தார்களும் ஒன்றுகூடி நெல் உற்பத்தியாளர் சங்கத்தை உருவாக்கினார்கள்.

உழைப்புக்கு ஏற்ற கூலியைக் கேட்டார்கள் விவசாயிகள். ஒப்புக் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்குள் கீழ்வெண்மணியை சேர்ந்த இருவரை நிலச்சுவான்தார்கள் கட்டி வைத்து அடித்ததும் கலவரம் மூண்டது. கோபாலகிருஷ்ண நாயுடு மற்றும் நில உடமையாளர்கள் அவர்களின் அடியாட்கள், விவசாயத் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே அமைக்கப்பட்ட கிஷான் போலீஸ் துணையுடன் படுகொலையை அரங்கேற்றினார்கள்.

1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று நாட்டுத் துப்பாக்கிகளுடன் சிலர் கீழ்வெண்மணிக்குள் புகுந்தார்கள். விவசாயிகளைத் தாக்கினார்கள், விவசாயிகள் திருப்பித் தாக்கினார்கள். நில உடமையாளர்களின் அடியாட்கள் துப்பாக்கியால் சுட்டதில் பலர் ஓடினார்கள். ஓடியவர்கள் தெருவொன்றின் மூலையில் "ராமையன்" என்பவரின் குடிசைக்குள் ஓடி ஒளிந்தார்கள். எட்டடி நீளம், ஐந்தடி அகலமுள்ள அந்தக் குடிசையில் 48 பேர் அடைந்திருந்தனர். கதவு அடைக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டதில் அக்குடிசை எரிந்து சாம்பலானது. பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் உடல் கருகி மாண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com