26.07.1995 - வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணப் பந்தலிலும் சாதனையா?

முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் சென்னையில் செப்டம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.
Published on
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் சென்னையில் செப்டம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

இதற்காக ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலுக்கு அருகில் செட்டிநாடு இல்லத்தின் பின்புறம் அரசியல் மாநாடுகளை மிஞ்சும் அளவுக்கு 75 ஏக்கர் பரப்பளவில் மி பிரம்மாண்டமாக பந்தல்கள் அமைக்கப்படுகிறது.

லட்சக்கணக்கானவர்களுக்கு ஒரு பிரிவினர் சாப்பிடுவதை மற்றவர் பார்க்க முடியாத அளவுக்கு ரக வாரியாக விருந்து அளிக்கும் வகையில் பல கோடி செலவில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பந்தல் அமைக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com