20.11.1945: நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விசாரணை துவங்கிய தினம் இன்று!

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின், போரில் அந்நாடு புரிந்த தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் இன  அழித்தொழிப்பு நடவடிக்கைகள் ... 
20.11.1945: நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தின் விசாரணை துவங்கிய தினம் இன்று!
Updated on
1 min read

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின், போரில் அந்நாடு புரிந்த தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள்  மற்றும் முரண்பாடான  தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய நியூரம்பெர்க் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஆணையமானது 1945 க்கும் 1946 க்குமிடையே ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் அமைந்துள்ள நீதி அரண்மணையில்  செயல்பட்டது. இந்த தீர்ப்பாயத்தால் உருவாக்கப்பட்ட சர்வதேச இராணுவ நடுவர் மன்றத்தின் முன் ஜெர்மனியைச் சேர்ந்த ஏராளமான யுத்த விதி மீறல் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டனர்.

இதன் முதல் விசாரணையில் போரின் முடிவில் பிடிபட்ட ஜெர்மனியின் நாஜித் தலைவர்கள் 21 பேர் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இந்த ஆணையத்தின் முதல் விசாரணைக் கூட்டம் நவம்பர் 20, 1945, முதல் அக்டோபர் 1, 1946, வரை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com