
ஜான் எப் கென்னடி 1961 முதல் 1963 வரை அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்.
இவர் தன்னுடைய பதவிக்காலத்தின் பொழுது, நவம்பர் 22, 1963 அன்று டெக்சாஸ், மாகாணம் டல்லாஸ் நகரில் திறந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, சுட்டுக் கொல்லப்பட்டார்.
கென்னடியை சுட்டுக் கொன்றதாக லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டான். ஆனால் இவன் இரண்டு நாட்களில் நீதிமன்ற விசாரணையின் போதே "ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான்.
பின்னர் கொலை குறித்த விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் யாருடைய துணையும் இன்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும் இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாக பரவலாக பேசப்பட்டது. ஆனாலும் இக்கொலைக்கான பின்னணி இன்றுவரையில் அறியப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.