

பாகிஸ்தானின் புகழ்மிக்க கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவரான இம்ரான்கான் 25.1.1952 அன்று, பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர்.
இளமை முதலே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் விளங்கிய அவர் , அந்த நாட்டுக்காக 1971 முதல் 1992 வரை கிரிக்கெட் ஆடினார். அந்த நாட்டின் அணிக்கு தலைவராகவுமிருந்து வழி நடத்தியுள்ளார். இவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராவார்.
அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தனது தாயாரின் பெயரில் லாகூரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்.
தற்போது அரசியலில் இணைந்து செயல்பட்டு வரும் அவர், 'தெரீக் ஈ இன்சாப் ' என்ற அரசியல் கட்சியின் தலைவராகி இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.