29.11.1908: 'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று!

"கலைவாணர்" என்று அன்புடன் அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்தார்.
29.11.1908: 'கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

"கலைவாணர்" என்று அன்புடன் அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் பிறந்தார்.

நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை நிலையில் வாழ்ந்தவர். சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.

அங்கே இருந்து அப்படியே திரைப்படத்துறையில் கால் பதித்தார். திரைப்படத் துறையில் இவரது முதல்படம்  1936-ல் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். 

பெரும்பாலும் தனக்காக சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக சமூகத்திற்கு உதவும் கருத்துக்களை வழங்கிய இவர் ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com