04.03.1876: ஒலிவாங்கி எனப்படும் மைக் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

ஒலிவாங்கி (ஆங்கிலத்தில் மைக்ரோபோன் என்றும், பேச்சுவழக்கில் இது மைக் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒலியலையை மின்னலையாக மாற்றும் ஒரு கருவி ஆகும்.
04.03.1876: ஒலிவாங்கி எனப்படும் மைக் கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!
Updated on
1 min read

ஒலிவாங்கி (ஆங்கிலத்தில் மைக்ரோபோன் என்றும், பேச்சுவழக்கில் இது மைக் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒலியலையை மின்னலையாக மாற்றும் ஒரு கருவி ஆகும்.

இந்த கருவியானது 1876ஆம் ஆண்டு இதே நாள் ஈமைல் பெர்லினர் என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது தொலைபேசியில் குரலொலியை மின்னலையாக மாற்றி அனுப்ப பயன்படுத்தப்பட்டது. தொலைபேசிகளிலும், ஒலிபதிப்பான்களிலும், கரோக்கி ஒலிஅமைப்புகளிலும், காதுகேளாதோருக்கான கருவிகளிலும், திரைப்படத் தயாரிப்புகளிலும், நேரடி மற்றும் பதிவுசெய்வதற்கான ஒலியியலிலும், எஃப்.ஆர்.எஸ் ரேடியோக்களிலும், மெகாபோன்களிலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி/ஒளிபரப்புகளிலும் ஒலிவாங்கி பயன்படுத்தப்படுகிறது.

மேலும் கணினிகளில் குரலொலி பதிவு செய்வதற்கும், குரலொலியை கண்டறியும் வசதியிலும், இணையத்திலிருந்தே பேசுவதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com