05.05.1818: ஜெர்மானிய மெய்யியலாளரான கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று!

கார்ல் மார்க்ஸ் என்கிற கார்ல் என்ரிச் மார்க்ஸ் மே 5, 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார்.
05.05.1818: ஜெர்மானிய மெய்யியலாளரான கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

கார்ல் மார்க்ஸ் என்கிற கார்ல் என்ரிச் மார்க்ஸ் மே 5, 1818-ல் ஜெர்மனியில் பிறந்தார். ஜெர்மானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளை வகுத்த மூவரில் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார்

உடல்நலக் குறைபாடு காரணமாக மார்ச் 14, 1883 அன்று லண்டனில் இவர் மறைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com