19.05.1925: அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று!

மல்கம் எக்ஸ்  ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார்
19.05.1925: அமெரிக்க மனித உரிமைச்செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

மல்கம் எக்ஸ்  ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு புனித ஹஜ் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார்.

மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம் பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார். இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார். அமெரிக்காவில் கருப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.

1964 மார்ச்சு 26 ஆம் பக்கலில் மார்டின் லூதர் கிங் சூனியரை மல்கம் எக்சு சந்தித்தார். இருவரும் சமூக உரிமைகளுக்கான விவாதம் ஒன்றில் கலந்து கொண்டார்கள்.

இசுலாம் தேசம் அமைப்பைவிட்டு மல்கம் எக்சு விலகினார். முசுலீம் மசூதி என்பதைத் தோற்றுவித்தார். சன்னி முசுலீம் பிரிவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

மதவெறியன் ஒருவனால் இவர் பெப்ரவரி 21, 1965 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது இறப்புக்கு பின்னால் பின்னர் பதிப்பாகி வெளிவந்த அவரது தன் வரலாறு நூல், கருப்பின இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்புத்தகம் 1960-70 காலகட்டத்தில் கறுப்பின மக்கள் முன்னெடுத்த அதிகாரப் போராட்டத்திற்கு அடித்தளம் இட்டது.

1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com