26.05.1937: புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகை 'ஆச்சி' மனோரமா பிறந்த தினம் இன்று!

மனோரமா பிரபலமான தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.
26.05.1937: புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகை 'ஆச்சி' மனோரமா பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

மனோரமா பிரபலமான தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் அன்போடு 'ஆச்சி' என அழைக்கப்பட்டார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகின் ஈடு இணை இல்லாத நடிகையாக இருந்த மனோரமா உடல்நலக் குறைவால் 10 அக்டோபர் 2015 அன்று காலமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com