
கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆகின்றது.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி.. வயது முதுமை காரணமாக இன்று தீவிர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும், தமிழக அரசியல் வரலாற்றில் அவர் என்றுமே அசைக்க முடியாத ஆலமரம்தான்.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ஆம் ஆண்டு ஜூலை 27ம் தேதி திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் கருணாநிதி. அன்றைய நாள் முதல் தொடர்ந்து 50 ஆண்டுகள் அக்கட்சியின் ஈடு இணையற்ற தலைவராக அவரே திகழ்கிறார். தொடர்ந்து திகழ்வார்.
கருணாநிதி, தான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தோல்வியைக் காணாதவர் மட்டுமல்ல, தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
அவரைக் கொண்டாட மட்டுமல்ல.. அவரது நினைவுப் பக்கங்களைப் புரட்டவும் இது ஒரு சரியான தருணம் தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.