கருணாநிதி பெற்றுத்தந்த முத்தான உரிமைகளும்.. திட்டங்களும்!

சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு
கருணாநிதி பெற்றுத்தந்த முத்தான உரிமைகளும்.. திட்டங்களும்!
Updated on
1 min read


1. சுதந்திர தினத்தன்று கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார். 

2. தனியார் பேருந்துகளை நாட்டுடமை ஆக்கி, சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், திருவள்ளுவர் பெயர்களில் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்.
 
3. குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கி ஏழை மக்களும் மாடி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பை உருவாக்கினார். 

4. மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். 

5. மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்து, இலவசமாக சைக்கிள் ரிக்ஷா வழங்கினார். 

6. தமிழறிஞர்களின் பிள்ளைகளுக்கு பொறியியல், மருத்துவப் படிப்புகளில் 5 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கினார். 

7. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டு வந்தார். 

8. பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம் கொண்டு வந்தார். 

9. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்காக 20 தகவீத இட ஒதுக்கீடு அளித்தார்.

10. கிழக்கு ஆசியாவிலேயே முதன்முதலாகக் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் ஏற்படுத்தினார்.

11. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது போல் மொழிப்போர் தியாகிகளுக்கும் ஒய்வூதியம் வழங்கினார். 

12. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் உட்பட்ட ஒரு சிற்றூரைத் தேர்ந்தெடுத்து, அதில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்தினார். 

12. அரசு-பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்தைக் கொண்டு வந்தார். 

13. நாடெங்கும் சமத்துவபுரங்களைத் திறந்து அவற்றிற்குப் ஷபெரியார் நினைவு சமத்துவபுரம்' எனப் பெயிரிட்டார். 

14. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலத்திற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்தினார்.

15. இடைத்தரகர்களின் தலையீடு இன்றி உற்பத்தியாளரும், நுகர்வோரும் நேரடித் தொடர்பு கொள்ளும் வகையில் உழவர் சந்தைகள் தொடங்கினார்.  

16. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் 5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கினார்.

17. உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீதம் மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார். 

18. நகரங்களை குக்கிராமங்களுடன் இணைத்திட மினிபஸ்களை அறிமுகம் செய்தார். 

19. இந்தியாவிலேயே முதன்முதலாக டைடல் பார்க் என்னும் கணினி மென்பொருள் பூங்காவை கொண்டு வந்தார். 

20. உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். 

21. தமிழ்விசைப் பலகையை தரப்படுத்துவதற்காக தமிழ் இணைய மாநாட்டை நடத்தினார்.

22. சட்டப்பரேவை உறுப்பினர்களுக்குத் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கும் முறையை தொடங்கி வைத்தார். 

23. தமிழைச் செம்மொழியாக அறிவிக்கச் செய்தார். 

24. தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்தை சென்னைக்கு கொண்டு வந்தது உள்பட பல முத்தான திட்டங்களை கருணாநிதி தனது ஆட்சியில் கொண்டுவந்து சிறப்பு சேர்த்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com