அரசு தேர்விற்கான அரங்கம்: வேதியியல் - உலோகங்கள் மற்றும் அலோகங்கள்

தனிமங்களை விரிவாக உலோகங்கள் என்றும் அலோகங்கள் என்றும் வகைப்படுத்தலாம். இயற்கையில் 92 தனிமங்கள் உலோகங்களாகவும், 20 தனிமங்கள் அலோகங்களாகவும் உள்ளன.
அரசு தேர்விற்கான அரங்கம்: வேதியியல் - உலோகங்கள் மற்றும் அலோகங்கள்
Updated on
6 min read

* தனிமங்களை விரிவாக உலோகங்கள் என்றும் அலோகங்கள் என்றும் வகைப்படுத்தலாம். இயற்கையில் 92 தனிமங்கள் உலோகங்களாகவும், 20 தனிமங்கள் அலோகங்களாகவும் உள்ளன.

* தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் உலோகங்கள் ஆகும். கார்பன், சல்பர், குளோரின் ஆக்சிஜன் மறஅறும் ஹீலியம் போன்ற தனிமங்கள் அலோகங்கள் ஆகும்.

* தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு மற்றும் சோடியம் போன்ற தனிமங்கள் உலோகங்கள் ஆகும். கார்பன், சல்பர், குளோரின் ஆக்சிஜன் மற்றும் ஹீலியம் போன்ற தனிமங்கள் அலோகங்கல் ஆகும்.

* உலோகங்கள் பொதுவாகக் கடினமானவை. அவற்றை எலிதில் தகடாகவும், கம்பியாகவும் மாற்றலாம். பளபளப்பான தோற்றமுடையவை மற்றும் எளிதில் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக்கூடியவை.

* அலோகங்கள் பொதுவாக நொருங்கும் தன்மை உடையவை, பளபளப்பற்றவை மற்றும் மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தாதவை.

* இயற்கையில் பெரும்பாலான உலோகங்கள் அவற்றின் சேர்மங்களாகக் கிடைக்கின்றன.

* தங்கம், பிளாட்டினம் போன்ற சில உலோகங்கள் மட்டுமே தனிம நிலையில் காணப்படுகின்றன.

* நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர் போன்ற அலோகங்கள் தனித்த நிலையிலும், சேர்மங்களாகவும் காணப்படுகின்றன. பெரும்பாலான பிற அலோகங்கள் இணைந்த நிலையில் சேர்மங்களாகவே காணப்படுகின்றன.

உலோகங்களின் பண்புகள்

* பொதுவாக உலோகங்கள் உயர் கொதிநிலைகளைப் பெற்றிருக்கின்றன. எனவே, பாதரசம் தவிர அனைத்து உலோகங்களும் அறை வெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படுகின்றன.

* அறைவெப்பநிலையில் கார்பன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை திண்மங்களாகவும், புரோமின் நீர்மமாகவும், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் ஹீலியம் முதலியவை வாயுக்களாகவும் உள்ளன.

* உலோகங்களுக்குப் பொலிவுத் தன்மை (பளபளப்புத் தன்மை) உண்டு. அலோகங்களுக்கு இத்தன்மை இல்லை.

* உலோகங்கங்கள் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து ஆக்சைடுகளைத் தருகின்றன. பொதுவாக உலோக ஆக்சைடுகள் காரத்தன்மை உடையவை.

* சோடியம் குளிர்ந்த நீருடன் தீவிரமாக வினைபுரியும் இரும்பும், துத்தநாகமும் நீராவியுடன் மெதுவாக வினைபுரிகின்றன.

* ஆனால் வெள்ளி, காப்பர் மற்றும் நிக்கல் முதலிய உலோகங்கள் நீருடன் வினைபுரிவதில்லை.

* கார்பன், சல்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அலோகங்கள் காற்றில் எரிந்து அவற்றின் ஆக்சைடுகளைத் தருகின்றன.

உலோகங்களின் பயன்கள்

* இரும்பாலான பொருட்களை துருப்பிடிக்காமல் பாதுகாக்க துத்தநாகம் பயன்படுகிறது.

* மின்சேமிப்புக் கலங்களில் லெட்(காரீயம்) பயன்படுகிறது. சமையல் பாத்திரங்களின் மீது முலாம் பூச வெள்ளீயம் பயன்படுகிறது.

* பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் டியூராலுமின் மற்றும் மாக்னாலியம் போன்ற உலோகக் கலவைகளில் அலுமினியம் உள்ளது.

* அலுமினி்யம் சமையல் பாத்திரங்கள் செய்யவும், மின் கம்பிகள், அலுமினியத் தகடுகள் மற்றும் பூச்சு (Paint) தயாரிக்கவும் பயன்படுகிறது.

* அலோகங்களில் நிலக்கரி எரிபொருளாகவும், வைரம் மற்றும் கிராபைட் போன்றவை பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.

* உரங்கள் மற்றும் பட்டாசுகள் செய்ய பாஸ்பரஸ் பயன்படுகிறது. பாஸ்பரஸ் தாவரங்களின் முக்கிய சத்துப் பொருளாகவும், விலங்குகளின் வலுவான எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான முக்கியப் பொருளாகவும் விளங்குகிறது.

* ஒரு சிறந்த பூஞ்சைக் கொல்லியாக சல்பர் பயன்படுகிறது. மேலும் இரப்பருடன் சல்பரை சேர்த்து வல்கனைசிங் செய்யப் பயன்படுகிறது.

* சிலிகான் ஒரு குறைகடத்தி என்பதால் டிரான் சிஸ்டர்களில் பயன்படுகிறது. மேலும் அது சிலிகான் வெண்கலம் எனப்படும் உலோகக் கலவையைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

* இந்த உலோகக் கலவை தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுகிறது.

* தங்கமும், பிளாட்டினமும் நீர், காற்று, அமிலம் மற்றும் காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.

* எனவே இவை உயர்வகை உலோகங்கள் எனப்படுகின்ரன. மின் சாதனங்கள் தயாரிக்கவும் பிளாட்டினம் பயன்படுகிறது.

* தூய தங்கம் மென்மையானது. எனவே அது ஆபரணங்கள் செய்ய ஏற்றதல்ல. சிறிதளவு காப்பர் அல்லது வெள்ளியை தங்கத்துடன் கலந்தால் கடினத்தன்மை கூடுகிறது.

* தங்கத்தின் தூய்மையை அளந்தறிய காரட் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. 24 பங்கு எடையுள்ள உலோகக் கலவையில் எத்தனை பங்கு எடை தங்கம் உள்ளது என்பதை இது குறிக்கும்.

* 24 காரட் தங்கம் தூய தங்கமாகும். 22 காரட் ஆபரண தங்கத்தில் 22 பங்கு எடை தங்கமும் 2 பங்கு எடை காப்பரும் கலந்துள்ளது. 18 காரட் ஆபரண தங்கத்தில் 18 பங்கு எடை அளவு தங்கமும் 6 பங்கு எடை அளவு காப்பரும் உள்ளது. தற்பொழுது தங்கத்தின் தூய்மையை சதவீதத்தில் குறிப்பிடுகிறார்கள்.

* உதாரணமாக 22 காரட் தங்க்ததின் தூய்மையை 91.6 சதவீதம் அல்லது எளிமையாக 916 என்று குறிப்பிடுகிறார்கள்.

* வேதியில் முறைப்படி துறு என்பது நீரேற்றமடைந்த பெர்ரிக் ஆக்சையு (Fe2O3 3H2O)

* உலோகங்களின் மேற்பரப்பு அவற்றின் சேர்மங்களாக மாறி உதிர்வதற்கு அரிமானம் என்று பெயர். இரும்பின் அரிமானத்தை துருப்பிடித்தல் என்று அழைக்கிறோம். துருப்பிடித்தல் ஒரு மெதுவான ஆக்சிஜனேற்றமாகும். இரும்பு துருப்பிடிப்பதற்கு ஆக்சிஜனும் (காற்று) நீரும் தேவைப்படுகிறது.

* இரும்பாலான பொருட்களின் மேற்பரப்பில் துத்தநாக உலோகத்தை மெல்லிய படலமாக படிய வைத்தால் இரும்பு துருப்பிடிப்பது தவிர்க்கப்படுகிறது. இத்தகைய செயலுக்கு நாகமுலாம் பூசுதல் என்று பெயர்.

* மின்சாரத்தின் உதவியுடன் ஒரு உலோகப் பொருளின் மீது இன்னொரு உலோகத்தை பூசுவதற்கு (படிய வைப்பதற்கு) மின் முலாம் பூசல் என்று பெயர்.

* எவர்சில்வர் (துருப்பிடிக்காத எஃகு) என்பது இரும்பின் உலோகக் கலவை. அது எளிதில் துருப்பிடிப்பதில்லை.

* நம் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தால் இரத்த சோகை ஏற்படும். ஆனால் மிக அதிகயளவு இரும்புச் சத்து இருந்தால் ஸிடோரிஸிஸ் (Siderosis) என்ற நோயை உண்டாக்கும்.

* உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டுள்ள சில தனிமங்களுக்கு உலோகப் போலிகள் என்று பெயர். பிஸ்மத், சிலிகான், ஜெர்மானியம், ஆர்சனிக், ஆண்டிமணி, டெல்லூரியம் மற்றும் பொலேனியம் ஆகியவை உலோகப் போலிகளாகும்.

இரும்பு

* உலோகங்களின் ராஜா என்று இரும்பு ்ழைக்கப்படுகிறது. இரும்பின் தாதுக்கள் ஹேமடைட் (Fe2O3), மாக்னடைட் (Fe3O4), இரும்பு பைரைட்டுகள் (FeS2).

* வார்ப்பிரும்பு பொதுவாக முக்கியமான தாதுவான ஹேமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

* எஃகு பெசிமர் முறையில் அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. வார்ப்பிரும்பில் 2 முதல் 5 சதவீதம் வரையிலும், தேனிரும்பில் 0.1 முதல் 0.2 சதவீதம் வரையிலும், எஃகில் 0.2 முதல் 2 சதவீதம் வரையிலும் கார்பன் காணப்படும்.

அலுமினியம்

* அலுமினியம் சில்வர் போன்ற வெண்மை நிறம் கொண்டது. இது உறுதியானதும், குறைந்த எடையும் கொண்டது.

* அலுமினியத்தின் முக்கியத் தாதுக்கள் பாக்சைட் (A12O3. 2H2O),  கிரையோலைட் (Na3A1F6), கோரண்டம் (A12O3) ஆகியன.

* பாக்சைட் தீதுவிலிருந்து அலுமினியம் மின்னாற் பகுத்தல் முறையில் பிரித்தெடுக்கப் படுகிறது. அலுமினியத்தை ஹோப் செல் மூலம் தூய்மைப்படுத்துவர்.

* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ஒன்றோடு ஒன்று உருக்கும்போது கிடைப்பதே உலோகக் கலவையாகும்.

* பிஸ்மத் லெட், டின் மற்றும் காட்மியத்தின் கலவையை மர உலோகம் (Wood Metal) என்கிறோம். இது காகித உற்பத்தித் தொழிலில் அச்சு உலோகமாக பயன்படுகிறது.

ஹைட்ரஜன்

* தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் முதல் தனிமமாக உள்ளது. ஹைட்ரஜன் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு.

* எல்லா வாயுக்களைக் காட்டிலும், இது இலேசானதாக உள்ளதால் விரவும் தன்மை அதிகம். நீரில் கரையாது. ஹைட்ரஜன் அமிலத்தன்மையோ அல்லது காரத் தன்மையோ அற்றது.

* தாவரங்கலிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இரட்டைப் பிணைப்புக் கொண்ட நிறைவுறாச் சேர்மம். ஹைட்ரஜனை சேர்க்கும்பொழுது அது நிறைவுற்று வனஸ்பதியாக மாறுகிறது. இதுவே எண்ணெய்களில் ஹைட்ரஜனேற்றம் ஆகும்.

* அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிகளில் நீர்ம ஹைட்ரஜன் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

* ஹைட்ரஜன் அதிக லகோரி மதிப்பைப் பெற்றுள்ளது. ஹைட்ரஜன் எரியும் பொழுது எந்த எரிபொருளையும் காட்டிலும் அதிக ஆற்றலைத் தருகிறது. எனவே பிற்காலத்தில் இது ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படலாம். இது எந்த வித மாசையும் ஏற்படுத்தாது.

* ஹைட்ரஜன் உலோகங்களை உருக்கி இணைப்பதற்கு பன்படுத்தப்படுகிறது.

அம்மோனியா

* அம்மோனியா இயற்கையில் கிடைக்கும். அம்மோனியம் குளோரைடிலிருந்து பெறப்படுகிறது.

* கிரேக்க வார்த்தையில் அம்மோனியம் குளோரைடுக்கு சால் அம்மோனியேக் என்று பெயர். 1774-ல் ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் நீர்த்த சுண்ணாம்பைச் சால் அமோனியாவுடன் சேர்த்து சூடு செய்து அம்மோனியைவைத் தயாரித்தார்.

* அம்மோனியம் சல்பேட் மற்றும் அம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்கள் பெருமளவில் தயாரிப்பதற்கு அம்மோனியா ஒரு முக்கியமான வேதிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது பிளாஸ்டிக் மற்றும் நைலான் தயாரிக்கவும் பயன்படுகிறது.

* அம்மோனியா பெருமளவில் ஹேபர் முறையில் தயாரிக்கப் படுகிறது. முதல் உலகப் போரின் போது பிரஸ் ஹேபர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி இம்முறையைக் கண்டுபிடித்ததால் இம்முறைக்கு அவரது பெயர் வழங்கப்பட்டது.

* அம்மோனியா ஒரு நிறமற்ற வாயு. அது மூக்கைத் துளைக்கும் மணம் கொண்டது. நீரை விட இலேசானது. மிக அதிகமாக நீரில் கரையும் தன்மை கொண்டது.

* நீரில் செறிவு கொண்ட அம்மோனியா கரைசலுக்கு நீர்ம அம்மோனியா என்று பெயர்.

* ஆஸ்ட்வால்ட் முறையில் நைட்ரிக் அமிலம் அதிக அளவில் தயாரிக்கவும், சால்வே முறையில் சலவை சோடா மற்றும் சமையல் சோடா தயாரிக்கவும், அம்மோனியம் சல்பேட், அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் யூரியா போன்ற உரங்கள் தயாரிக்கவும், பிளாஸ்டிக் தயாரிக்கவும் சாயங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்கவும் அம்மோனியா பயன்படுகிறது.

* நீர்ம அம்மோனியா கிரிஸ் மற்றும் எண்ணெயில் கரையும். இதனால் சமையல் முறையில் சுத்தம் செய்ய பன்படுகிறது. ஐஸ் தயாரிக்கும் கலத்தில் நீர்ம அம்மோனியா குளிர்விப்பானாக பன்படுகிறது.

சல்ஃபர்

* ப்ரைம்ஸ்டோன் என்ற பெயரில் பைபில் காலத்திலிருந்து சல்ஃபர் எரியும் பொழுது வெறுப்புண்டாக்குகிற, மூச்சுத் திணறக்கூடிய வாயுவை உண்டாக்கும் பொருளாக சல்ஃபர் அறியப்பட்டிருக்கிறது.

* முட்டை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றில் சல்ஃபர் உள்ளது.

* இயற்கையில் சல்ஃபர் தனியாகவும், உலோகங்களுடன் கூடியும் கிடைக்கிறது. இது பெரும்பாலும் உலோக சல்ஃபைடுகளாக காணப்படுகின்றன.

* உதாரணமாக கலீனா (Pbs), ஜிங்க் பிளண்டு (Zns), சின்னபார் (Hgs), இரும்புபைரைட்ஸ் (FeS2) போன்றவை.

* சல்ஃபரின் அணு எண் 16. இதன் எலக்ட்ரான் அமைப்பு 2,8,6. இதில் இணைதிறன் கூட்டில் 6 எலக்ட்ரான்கள் உள்ளன.

* கந்தகம் (சல்ஃபர்) வேறுபட்ட திண்ம படிக வடிவங்களைப் பெற்றுள்ளது. சாய்சதுர சல்ஃபர் (Rhombic Sulphur) ஊசி வடிவ சல்ஃபர் (Monoclinic Sulpur) போன்றவை இந்தப் புற வேற்றுமை வடிவங்கள் ஆகும். கார்பன் மற்றும் பாஸ்பரஸ் இந்தப் பண்பைக் கொண்டுள்ளன.

* புறவேற்றுமை வடிவத்துவம் என்பது அலோகத்திற்கு உரிய ஒரு சிறப்புப் பண்பாகும். உலோகத்தில் டின் மட்டுமே இந்தப் பண்பைக் கொண்டுள்ளது.

* ஒரு தனிமம் வேறுபட்ட இயற்பியல் பண்புகளையும், ஒத்த வேதிப் பண்புகளையும் கொண்ட, நிலை மாறுபாடின்றி வேறுபட்ட வடிவங்களில் நிலவும் தன்மை புறவேற்றுமை வடிவத்துவம் எனப்படும்.

* ஒரு தனிமத்தின் இத்தகைய வேறுபட்ட வடிவங்கள் அதன் புறவேற்றுமை வடிவங்கள் என அழைக்கப்படுகின்றன.

* அமெரிக்காவில் மெக்சிகோ வளைகுடாவில் அதிக அளவில் சல்ஃபர் படிந்துள்ளது. இந்தப் படிவம் பூமிக்கு அடியில் சுமார் 1000-1500 அடி ஆழத்தில் உள்ளது.

* சுரங்க முறையில் சல்ஃபரை எடுப்பது 1894-ல் ஹெர்மன் ஃபிராஷ் என்பவரால் ஒரு எளிய முறையில் கண்டுபிடிக்கப்பட்டதால் இம்முறைக்கு ஃபிராஷ் முறை என்று பெயர்.

* வெடிமருந்துத் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, புகைப்படத் தொழிற்சாலை, சல்ஃபியூரிக் அமிலம் தயாரித்தல் ஆகியவற்றில் சல்ஃபர் பயன்படுகிறது.

* தோள் களிம்புகள் செய்யவும், சல்போனமைடு போன்ற சல்ஃபர் மருந்துகள் தயாரிக்கவும், அழகு நிலையங்களில் முடிக்கு குறிப்பிட்ட வடிவம் தரவும், இரப்பை வல்கனைஸ் செய்யவும் சல்ஃபர் பயன்படுகிறது.

* இயற்கை இரப்பரை சல்ஃபருடன் சேர்த்து குறிப்பிட்ட வெப்பநிலையில் தேவையான காலத்திற்கு சூடுபடுத்துவதே இரப்பரை வல்கனைஸ் செய்தல் ஆகும்.

* தாவரத்தில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை அழிக்க  சல்ஃபர் ஒரு கிருமிநாசினியாகவும், காளான் கொல்லியாகவும், பூச்சி நாசினியாகவும் பயன்படுகிறது.

கந்தக டை ஆக்சைடு

* 1770ம் ஆண்டு ஜே.பிரிஸ்ட்லி என்பவரால் அடர் சல்ஃபியூரிக் அமிலத்தை மெர்க்குரியுடன் வினைபுரியச் செய்து சல்ஃபர் டை ஆக்சைடு தயாரிக்கப்பட்டது. இது சல்ஃபியூரிக் அமிலம் என்றழைக்கப்பட்டது.

* சல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு நச்சுத்தன்மை உடைய நிறமற்ற வாயு, காற்ரை விடக் கனமானது, சல்ஃபர் டை ஆக்ஸைடு எரியவோ அல்லது எரிவதற்கு துணை புரியவோ செய்யாது.

* சல்ஃபர் டை ஆக்சைடு வெளுக்கும் செயல் திறனைக் கொண்டுள்ளதற்குக் காரணம் அதன் ஒடுக்கும் பண்பே ஆகும்.

* ஈரக்காற்றில் இது பிறவி நிலை ஹைட்ரனைத் தருகிறது.

* தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கவும், சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை தூய்மையாக்கவும், காகிதங்கள் தயாரிக்கவும் சல்ஃபர் டை ஆக்சைடு பயன்படுகிறது.

* மேலும் ஒரு கிருமி நாசினியாகவும், பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

* மென்மையான பொருட்களாகிய கம்பளி, பட்டு போன்றவற்றை வெளுக்கப் பயன்படுத்தப்படுகிறது சல்ஃபர் டை ஆக்சைடு.

* குளிர் சாதனப் பெட்டிகளில் ப்ரியான்களுக்குப் பதிலாக சல்ஃபர் டை ஆக்சையு குளிரூட்டியாகக் பயன்படுகிறது.

* ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறுகளில் பாதுகாக்கும் பொருளாகவும், ஜாம் மற்றும் உலர்ந்த பழஹ்களில் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

* சல்ஃபர் டை ஆக்சைடு ஒரு குளோரின் அகற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

கந்தக அமிலம்

* இது வேதிப்பொருட்களின் அரசன் என்றழைக்கப் படுகிறது. ஏனனெனில் இது ஒரு முக்கிய வேதிப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

* கடந்த காலங்களில் வேதியியல் அறிஞர்கள் படிக ஜிங்க் சல்பேட்டை சூடுபடுத்தி கந்தக அமிலத்தை தயாரித்தனர். ஜிங்க் சல்பேட் வெள்ளைத் துத்தம் (White Vitriol) ஆகும். எனவே இதிலிருந்து கிடைத்த எண்ணெய் போன்ற திரவத்திற்கு கண்ணாடி எண்ணெய் (Oil of Vitriol) என்று பெயரிட்டனர்.

* விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பல வகையான உரங்கள் கந்தக அமிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. நீர்த்த கந்தக அமிலம் கார் பாட்டரிகளிலும் பயன்படுகிறது.

* தொடுமுறையில் சல்ஃபியூரிக் அமிலம் தயாரிக்கப் படுகிறது.

* அடர் கந்தக அமிலம் மற்றும் நீர்த்த கந்தக அமிலம் என்ற இரு நிலைகளில் கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகிறது.

* அடர் கந்தக அமிலம் என்பது நிறமற்ற, மணமர்ற, அடர்த்தியான வளிமண்டலத்திலிருந்து நீரை உறிஞ்சக்கூடிய, எண்ணெய் போன்ற நீர்மம். இது அதிக அளவில் அரிக்கக்கூடியது. இதில் 98 சதவீத கந்தக அமிலமும் 2 சதவீத நீரும் உள்ளது.

* நீர்த்த கந்தக அமிலம் என்பதில் 10 சதவீத கந்தக அமிலமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.

* கந்தக அமிலம் அம்மோனியம் சல்பேட் போன்ற உரங்கள் தயாரிக்கவும், செயற்கை இழைகள், பிளாஸ்டிக், கார் பேட்டரி, சாயங்கள்., மருந்துகள் தயாரிக்கவும், பெட்ரோல் சுத்திகரிப்பு செய்யவும், உலோகங்களை தூய்மையாக்கவும், வணிக ரீதியில் கண்ணாடி தயாரிக்கவும், சோப்புக்கள் மற்றும் சலவைப் பொருட்களை பெறுமளவில் தயாரிக்கவும் பயன்படுகிறது.

இணையத்தோடு இணைந்திருங்கள். நாளைப் பார்ப்போம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com