
உரைநடை: பெருந்தலைவர் காமராசர்
இளமைப் பருவம்:
* விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி தம்பதியருக்கு மகனாய் 1903 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார்.
* நாட்டாண்மைக்காரராக இருந்த காமராசரின் தாத்தா, பல சமயங்களில் பஞ்சாயத்துக் கூட்டங்களுக்குத் தன்பெயரன் காமராசரையும் அழைத்துச் செல்வார்.
* திண்ணைப் பள்ளியில் தமிழ் எழுத்துக்களைக் கற்று, அதன்பிறகு ஓர் ஆண்டு தமிழ்ப்பாடம் கற்றார்.
* அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.
அரசியலில் ஈடுபாடு:
* காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய
அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
* "மெய்கண்டான் புத்தகசாலை" என்ற நூலை நிலையத்திற்கு சென்று
இலெனின், கரிபால்டி. நெப்போலியன் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் வாதம் புரியவும் கற்றுக் கொண்டார்.
* இளம் வயதிலேயே தேசிய இயக்கமான காங்கிரசில் சேர்ந்தார்.
* சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்துகொண்டு பதினோராண்டுகள் சிறையில் கழித்தார்.
* அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி
* அவரை கட்சியின் செயலாளராக நியமித்தார்.
* காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.
* 1937இல் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவர்களை உருவாக்குபவர்:
* 1939 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 12 ஆண்டுகள் அப்பதவியில் செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்தார்.
* 1945இல் பிரகாசம், 1947இல் ஒமந்தூர் இராமசாமி மற்றும் 1949இல் குமாரசாமி ஆகியோர் முதல்வராகப் பதவியேற்பதற்குக் காரணமாக இருந்தார்.
* நேருவின் மறைவுக்குப்பின் லால்பகதூர் சாஸ்திரியையும், பகதூர் மறைவுக்கு பின்பு இந்திரா காந்தியையும் நாட்டின் பிரதமராக ஆக்கியதில் இவர் பெரும்பங்காற்றினார்.
* பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவர்
* "தலைவர்களை உருவாக்குபவர்" என அழைக்கப்பட்டார்.
முதல்வர் காமராசர்:
* 1954-இல் இராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1963 இல் தாமாகப் பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயல்பட்டார்.
* காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்வியமைச்சராகவும் பணியாற்றினார்.
தொழில் முன்னேற்றம்:
* காமராசர் முதல்வராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
* கிண்டி, அம்பத்தூர், ராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
* இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
* நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை,
சர்க்கரை ஆலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெரம்பூர்த் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.
கல்விப் புரட்சி:
* காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
* "தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி" என்பதே நோக்கமாக அமைந்தது.
* பள்ளி வேலைநாள்களை 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தினார்.
* தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
* ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
* மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.
சமுக முன்னேற்றத் திட்டங்கள்:
* தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை
செய்தார்.
* நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
* நில உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
* சிறுதொழிலாளர் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
* மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.
காமராசர் திட்டம்:
* 1962 ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
* கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம்
ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே "காமராசர் திட்டம்" ஆகும்.
* முதலில் தாமே முதல்வர் பதவியைவிட்டு விலகிக் கட்சிப்பணிக்குத் திரும்பினார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர்:
* புவனேசுவர் நகரில் 1963 ஆம் ஆண்டில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்றார்.
* நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப்பூசல்களைப் போக்கி, மக்களிடம் நேரடித் தொடர்புகொண்டார்.
* இந்தியப் பிரதமர் நேரு 1964 ஆம் ஆண்டு காலமானார்.
* சாஸ்திரி எதிர்பாராதமுறையில் 1966 ஆம் ஆண்டு தாஸ்காண்டில் உயிரிழந்தார். இந்த இரு சமயங்களிலும்ல் புத்தி சாதுர்யமாக செயல்பட்டு பிரதமரை தேர்வு செய்தார்.
* அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பெறும் பெருந்தலைவராக உயர்ந்தார்.
காமராசருக்குச் செய்த சிறப்புகள்:
* காமராசரக்கு நடுவணரசு "பாரத ரத்னா விருது (இந்திய மாமணி)" அளித்துச் சிறப்பித்து,
* நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
* தமிழக அரசு இவரின் பெயரால்" மதுரை காமராசர் பல்கலைக்கழகம்" எனப் பெயர் சூட்டியது.
* கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
* சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
* காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
* அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
* தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
* காமராசர் பிறந்த நாளான சூலை 15 ஆம் நாள் ஆண்டுதோறும் "கல்வி வளர்ச்சி நாளாக" தமிழ அரசு அறிவித்துள்ளது.
* இவரை "கல்விக் கண் திறந்தவர்" எனத் தமிழுலகம் போற்றுகிறது.
மறைவு:
* 1972 ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர்
* இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.
புகழுரைகள்:
* தன்னலமற்ற தலைவர்
* கர்மவீரர்
* கல்விக்கண் திறந்த முதல்வர்
* ஏழைப்பங்காளர்
நாட்டுப்புறப்பாடல்
பாடலின் பொருள்:
* மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளிதான் விளக்கு.
* பரந்த கடலே பள்ளிக்கூடம்
* கடலே எங்களின் உற்ற தோழன்.
* மீன்பிடி வலையே படிக்கும் நூல்.
* கட்டுமரமே வாழும் வீடு.
* காயும் கதிரே வீட்டுக்கூரை.
* மேகமே குடை
* பிடிக்கும் மீன்களே பொருள்கள்.
* இடியும் மின்னுலும் பார்க்கும் கூத்து
* வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தா.
* நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி.
* மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு
* வணங்கும் தலைவர் பெருவானம்.
சொற்பொருள்:
* விரிகடல் - பரந்த கடல்
* காயும் ரவிச்சுடர் - சுட்டெரிக்கும் சூரியக்கதிர்
* யோகம் - தியானம்
* மீனவர்களுக்கு இரவில் விளக்காக விளங்குவது - விடிவெள்ளி
* மீன்வலை - மீனவரின் படிக்கும் நூல்
* மீனவர் கண்ணடியாகப் பயன்படுத்துவது - முழுநிலவே
* மீனவரின் வாழும் வீடு - கட்டு மரம்
பெண்மே
* உறுதி - உளஉறுதி
* சொரூபம் - வடிவம்
* தரணி - உலகம்
* தாரம் - மனைவி
* சேவை - தொண்டு
* அயலார் - உறவல்லாதோர்
இலக்கணக்குறிப்பு:
* அன்பும் ஆர்வமும் அடக்கமும் - எண்ணும்மை
* இன்ப சொரூபம் - உருவகம்
ஆசிரியர் குறிப்பு:
* கவிஞர் வெ.இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
* பெற்றோர் = வெங்கடராமன் - அம்மணி அம்மாள்
* தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்.
* இவருக்கு நடுவண் அரசு "பத்ம பூஷன்" விருது வழங்கிச் சிறப்பித்தது.
* இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 வரை.
* இவர் தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் எனப் பெருமையுடன் வழங்கப் பெற்றார்.
நூற்குறிப்பு:
* நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் கவிதைத் தொகுப்பில் தெய்வத் திருமலர், தமிழ்த் தேன்மலர், காந்திமலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசைமலர், அறிவுரை மலர், பல்சுவை மலர் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் அமைந்துள்ளன. இப்பாடல், சமுதாய மலர் என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.
படைப்புகள்:
* இசை நாவல்கள் - 03
* கட்டுரைகள் - 12
* தன்வரலாறு - 03
* புதினங்கள் - 05
* இலக்கியத்திறனாய்வுகள் - 07
* கவிதைத் தொகுப்புகள் - 10
* சிறுகாப்பியங்கள் - 05
* மொழிபெயர்ப்புகள் - 04
தில்லையாடி வள்ளியம்மை
பெற்றோரும் பிறப்பும்:
* வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க் என்னும் நகரில் பிறந்தார்.
* இவரின் பெற்றோர் - முனுசாமி, மங்களம்.
* இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்.
அறப்போர்:
* தென்னாப்பிரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு
உச்ச நீதிமன்றம் 1912 ஆண் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* போராட்டத்தின்போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
* 1913 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 23 ஆம் தேதி வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
* அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.
சிறைவாழ்க்கை:
* சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.
* அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
* சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டுப்பற்று:
* விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
* இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
* "சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?" என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
* அதற்கு வள்ளியம்மை, "இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்" என்று கூறினார்.
* அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
* உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமது 16 ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
காந்தியடிகளின் கருத்து:
* என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
* மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
* அவருடைய தியாகம் வீண் போகாது.
* சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என கண்முன் நிற்கிறது.
* நம்பிக்கை தான் அவரது ஆயுதம்" என்று வள்ளியம்மை குறித்து "இந்தியன் ஒப்பீனியன்" இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
* தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் "தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்" என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு செய்த சிறப்புகள்:
* தில்லையாடி - நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்கடையூருக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
* தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
* கோ-ஆப்-டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு
"தில்லையாடி வள்ளியம்மை மாளிகை" என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.
* சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக "வள்ளி" எனப்
பெயரிட்டார்.
* தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி நடுவணரசு, அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிட்டுள்ளது.
இராணி மங்கம்மாள்
* தமிழ்நாட்டில் நாயக்கர் மரபில் பெண்கள் முடிசூடி ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.
* காப்பாட்சியாளராக ஆட்சி புரிந்து உள்ளனர்.
* மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
* இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான், அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.
* மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
* அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது.
* பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆய்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்" என அறிவுரை கூறினார்.
* முத்துவீரப்பன், "நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை" என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.
* முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
* முத்துவீரப்பன் ஏழாண்டுக்காலம் ஆட்சி செய்தார்.
* அம்மைநோயால் பாதிக்கப்பட்டு உலக வாழ்வை நீத்தார்.
* கி.பி.1688 ஆண் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
* பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.
* அரசியல் பட்டறிவும், ஆட்சிப் பொறுப்பும் இராணி மங்கம்மாளின் மனத்தைக் கல்லாக்கியிருந்தன.
* கி.பி. 1688 ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றப்பட்டான.
* மங்கம்மாள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.
* திருவிதாங்கூரின் மன்னர் - இரவிவர்மா
* இராணி மங்கம்மாள் காலத்தில் மைசூர் மன்னன் - சிக்கதேவராயன்
* முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்பாற்றிக்கொண்டார்.
* முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.
* தளபதி நரசயப்பர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
* தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
* தளபதி நரசப்பையன் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம் இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.
* மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறிக்கே அணைகட்டிய போது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
* மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினார்.
* அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
* ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
* சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
* மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தைக் கட்டினார்.
* இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, "மங்கம்மாள் சாலை" எனப்படுகிறது.
* ஆணித்திங்களில் "ஊஞ்சல் திருவிழா" நடத்தினார்.
* மங்கம்மாள் மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம் போன்றவற்றை கட்டினார்.
* மங்கம்மாளின் பெயர் மங்காத புகழோடு விளங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.