TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 23

இறை மகனாகிய இயேசு பெருமான் பெத்தலகேமில் மரியன்னைக்கு மகனாகப் பிறந்தார்.
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 23
Published on
Updated on
4 min read

இரட்சணிய யாத்திரிகம்

- எச்.ஏ கிருட்டினனார்

* இறை மகனாகிய இயேசு பெருமான் பெத்தலகேமில் மரியன்னைக்கு மகனாகப் பிறந்தார்.

* இயேசு பெருமானின் தந்தை - சோசப்

* குழந்தை இயேசுவை, ஏரோது மன்னனின் கொடுமையிலிருந்து காப்பாற்றும் பொருட்டுத், தந்தை சோசப்பும் தாய் மரியன்னையும் குழந்தையோடு எகிப்துக்குச் சென்றனர்.

* இயேசு யூதேய காட்டிலிருந்து புனித யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

* இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர் - யூதாசு

* இயேசு, யூதேய மரபுகளை மீறினார் எனப் பொய்க் குற்றஞ் சாட்டி, பிலாந்து மன்னன் மரணதண்டனை விதித்தான்.

* இயேசுவின் தோள்களில் சிலுவையினைச் சுமத்தித் துன்புறுத்திக் கல்வாரிமலைக்குக் கொண்டு சேர்த்தனர்.

சொற்பொருள்:

* ஈண்டு - இவ்விடம்

* புகல்வது - சொல்வது

* காண்டகு - காணத்தக்க

* இருப்பாணி - இரும்பு ஆணி

* கடாவினார் - அடித்தார்

* கீண்டு - தோண்டி

* செற்றம் - சினம்

* குருசு - சிலுவை

* சொற்ற - சொன்ன

* துளக்கம் - விளக்கம்

* சுருதிமுதல் - மறை முதல்வராகிய இயேசுநாதர்

* சதைப்புண்டு - சிதைக்கப்பட்டு

* பன்னரிய - சொல்லுதற்கரிய

* பலபாடு - பல துன்பம்

* இரும்பொறை - பெரும்போறுமை

* வித்தகன் - ஆண்டவன்

* தொழும்பர் - அடியார்

* இசைபெறுதல் - புகழ்பெறுதல்

* துஞ்சினவர் - உறங்கியவர்

* கீண்டு - பிளந்து

* இருப்புமுனை - ஆணியின் நுனி

* வதைப்புண்டு - துன்பமடைந்து

* மாண்டுபடும்போது - இறக்கும்நிலையில்

* இரட்சகர் - காப்பவர்

* மன்றாடும் - மிக வேண்டுதல்

* ஆகடியம் - ஏளனம்

இலக்கணக்குறிப்பு:

* செங்கை, சேவடி, வெவ்விருப்பு - பண்புத்தொகைகள்

* இருப்பாணி - வலித்தல் விகாரம்

* கனிவாய் - உவமைத்தொகை

* வன்மறவோர் பண்புத்தொகை

பிரித்தறிதல்:

* ஈண்டினியான் - ஈண்டு+இனி+யான்

* காண்டகு - காண் + தகு

* சேவடி - செம்மை + அடி

* வெவ்விருப்பாணி - வெம்மை + இரும்பு+ ஆணி

* மற்றிரண்டு - மற்று+இரண்டு

* குருசேற்றி - குருசு + ஏற்றி

* தன்னரிய - தன் + அரிய

* தவிப்பெய்தி - தவிப்பு + எய்தி

* இத்தகைய - இ+தகைய

* மனநலம் - மனம் + நலம்

* எடுத்துரைக்கும் - எடுத்து + உரைக்கும்

* ஈண்டிவரே - ஈண்டு + இவரே

* இருப்புமுனை - இரும்பு

* எழுத்திட்டார் - எழுத்து + இட்டார்

* என்றாகடியமான - என்று + ஆகடியம் + ஆன

* பங்கிட்டார் - பங்கு + இட்டார்

ஆசிரியர் குறிப்பு:

* இரட்சணிய யாத்திரக நூலாசிரியர் எச்.ஏ.கிருட்டினனார். திருநெல்வேலி மாவட்டத்தில்லுள்ள கரையிருப்பு என்னும் ஊரில் 1827 ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார்.

தந்தை - சங்கர நாராயணர் பெரும் புலவராக விளங்கினார்.

* அன்னையார் - தெய்வ நாயகி அமமாள்.

* இவர்கள் ரெட்டியாபட்டியில் வாழ்ந்தவர்கள். பிறகு கரையிருப்பு சென்று வாழ்ந்த கிருட்டினனார், 30வது வயது தம் பெயரை எச்.ஏ.கிருட்டினனார் என மாற்றிக் கொண்டார்.

* தந்தையிடம் தமிழ் இலக்கியங்களையும், மாணிக்கவாசகத்தேவரிடம் இலக்கணங்களையும், பிலவணச் சோதிடரிடம் வடமொழியையும் கற்றார்.

* சாயர்புரம் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

* இரட்சணிய சமய நிர்ணயம், இரட்சணிய மனோகரம். இரட்சணியக்குறள் என்னும் நூல்களையும் இயற்றினார்.

* கிறித்துவக் கம்பர் எனப் புகழ்பெற்ற பெருங்கவிஞர் 1900 ஆண் ஆண்டு பிப்ரவரி 3 ஆண் தேதி இயற்கை எய்தினார்.

நூற்குறிப்பு:

* இரட்சணியயாத்திரிகம் என்பதன் பொருள் (உயிர், தன்னைக் காக்க வேண்டி) இறைவனை நோக்கிச் செல்லும் பயணம் என்பது, ஆன்ம ஈடேற்றத்தை விரும்புபவர் என்பதும் பொருந்தும்.

* ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய பிலிகிரிம்ஸ் புரோகிரஸ் என்னும் நூலைத்தழுவி ஹென்றி ஆல்பர்ட்டு கிருட்டினனார் வழிநூலாகத் தமிழில் இரட்சணிய யாத்திரிகம் என்னும் பெயரில் இயற்றினார்.

பொங்கல் திருவிழா

* தமிழர் திருநாள் - பொங்கல் விழா, தைத்திங்கள் நாள் விழா, தமிழினத்தின் தனி விழா, பண்பாட்டுப் பெருவிழா.

* வளமையின் அடையாளமே - அறுவடைக் காலம்

* வீடும், நாடும் தூய்மைப்படுகிற சுற்றுப்புறச் சூழலைப் போற்றுகின்ற இனிய திருநாள் - போகித் திருநாள்

* உழவுக்கு உறுதுணையான மாடுகளை நன்றியுணர்வோடு மதித்துப் போற்றிடும் திருநாள் - மாட்டுப் பொங்கல்

* ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரிடத்தில் நிலைத்து உழவுத் தொழில் செய்து, பண்பட்ட நாகரிக வாழ்வை மேற்கொண்டவர்கள் - தமிழர்கள்

* ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி எனவும், ஜப்பான் ஜாவா முதலிய நாடுகளில் அறுவடைத் திருவிழா எனவும் கொண்டாடப்படுகிறது.

* தமிழகம் மட்டுமன்றி இலங்கை, மலேசியா, மொரீசியது, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற கடல் கடந்த நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

ஓய்வும் பயனும்

அறிவியல் ஆய்வு செய்வாய் - நீ

அன்றாடச் செய்தி படிப்பாய்!

செறிவுறும் உன்றன் அறிவு - உளச்

செழுமையும் வலிவும் பெறுவாய்!

மருத்துவ நூல்கள் கற்பை - உடன்

மனநூலும் தேர்ந்து கற்பாய்!

திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் -வருந்

தீமையடையும் பொய்யும் களைவாய்!

-பெருஞ்சித்திரனார்

* பாவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம்

* இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.

* பெற்றோர் - துறைசாமி, குஞ்சம்மாள்

* 10.03.1933 அன்று பிறந்த இவர் 11.06.1995 ஆம் தேதி மறைந்தார்.

* கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

* தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.

எதிர்காலம் யாருக்கு?

* மீரா என்னும் பெயர் மீ.இராசேந்திரன் என்பதன் சுருக்கமே.

* இவர் சிவகங்கையில் பிறந்தார்.

* தாம் படித்த சிவகங்கை கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வரகாகவும் பணியாற்றினார்.

* மூன்றும்ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களையும், வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.

* தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது போன்ற பரிசுகளை வென்றுள்ளார்.

வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல்

* வஞ்சமாய நெஞ்சமோடு மொழிதல் என்ற பாடலை எழுதியவர் - மதுரகவி பாஸ்கரதாஸ்

* மனக்குரங்கு - உருவகம்

* நாடுநகர் - உம்மைத்தொகை

* செம்பொன் - பண்புத்தொகை

* மாடும்ஆடும் - எண்ணும்மை

* பாஸ்கரதாஸ் மதுரை நகரில் பிறந்தவர்

* இவர் இனிய இசையமைப்பால் புதிய பல இசையுருக்களை அமைத்தவர்.

* இசைப்புலமையுடன் நாடகப்புலமையும் பெற்றவர்.

* நாடக மேடைகளில் விடுதலைப் பாடல்களை இசைத்தவர்.

* இவரின் பாடல்களைக் கேட்ட காந்தியடிகள் இவரை பெரிதும் பாராட்டினார்.

* இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் இவர் வாழ்ந்த பகுதிக்கு மதுரகவி பாஸ்கரதாஸ் நகர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

* இவரின் காலம் கி.பி. 1892 - 1952 வரை.

* பாடப்பகுதியில் உள்ள பாடல் மதுகைவி பாஸ்கரதாஸ் கீர்த்தனைகளின் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளது.

திருவிளையாடல்புராணம்

சொற்பொருள்:

* வையை நாடவன் - பாண்டியன்

* உய்ய - பிழைக்க

* இறந்து - பணிந்து

* தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்

* இறைஞ்சி - பணிந்து

* சிரம் - தலை

* மீனவன் - மீன் கொடியை உடைய பாண்டியன்

* விபுதர் - புலவர்

* தூங்கிய - தொங்கிய

* பொற்கிழிய - பொன்முடிப்பு

* நம்பி - தருமி

* பைபுள் - வருத்தம்

* பனவன் - அந்தணன்

* கண்டம் - கழுத்து

* வழுவு - குற்றம்

* சீரணி - புகழ் வாய்ந்த

* வேணி - செஞ்சடை

* ஓரான் - உணரான்

* குழல் - கூந்தல்

* ஞானப்பூங்கோதை - உமையம்மை

* கற்றைவார் சடையன் = சிவபெருமான்

* உம்பரார் பத்தி - இந்திரன்

* நுதல் - நெற்றி

* ஆய்ந்த நாவலன் - நக்கீரன்

* காய்ந்த நாவலன் - இறைவன்

* உரைத்து, இரந்து - வினையெச்சம்

* சொல்லி, இறைஞ்சி - வினையெச்சம்

* மகிழ்ச்சி - தொழிற்பெயர்

* தூங்கிய, ஆய்ந்த - பெயரெச்சம்

* நேர்ந்து - வினையெச்சம்

* கொண்டு, வைத்து - வினையெச்சம்

* தேரா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

* பனைமலர் - வினைத்தொகை

* பற்றுவான், அஞ்சான் - வினையாலணையும் பெயர்

* குற்றம் - தொழிற்பெயர்

* தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - பெயரெச்சம்

* விழுந்து - வினையெச்சம்

* வம்மை - பண்புத்தொகை

* பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தார்.

* தந்தை - மீனாட்சி சுந்தர தேசிகர்

* மதுரை நகரத்தார் வேண்டுகோளுக்கு இணங்க, திருவிளையாடல்புராணம் இயற்றினார்.

* இந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் அரங்கேற்றினார்.

* இவர், திருவிளையாடல் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுபத்துதந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.

நூல் குறிப்பு:

* திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாக கொண்டது.

* இந்நூல் மதுரைக்காண்டம் (18 படலம்), கூடற்காண்டம் (30 படலம்), திருவாலவாய்க்காண்டம்(16 படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளை உடையது.

* இந்நூலின் 3363 விருதப்பாக்கள் உள்ளன.

* இந்நூலில் இறைவனின் 64 திருவுளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.

* ந.மு.வேங்கடசாமி இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com