தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தமிழகம் சென்னை சிந்தாரிப்பேட்டையில் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 8 ம் நாள் பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப்
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
Published on
Updated on
1 min read

பிறப்பு: ஜனவரி 8, 1901

இறப்பு: ஆகஸ்ட் 27,1980

பெற்றோர்: மொழிப் புலமை: தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இன்தி, பிரெஞ்சு, ஜெர்மன்.

சிறப்புப் பெயர்: தெ.பா.மீ. பன்மொழிப் புலவர்

தொழில்: தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர்

கல்வி: பி.ஏ., பி.எல்., எம்.ஏ, எம்ஓஎல் 

இலக்கிய வகை கருப்பொருட்கள்: தமிழிலக்கியம் வரலாறு மொழியியல்

விருதுகள்: கலைமாமணி, பத்மபூசன்

தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தமிழகம் சென்னை சிந்தாரிப்பேட்டையில் 1901 ஆம் ஆண்டு ஜனவரி 8 ம் நாள் பொன்னுசாமி கிராமணியாருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்கு தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார்.

1920: பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்

1922: பி.எல். பட்டம் பெற்றார்.

1923: எம்.ஏ. பட்டம் பெற்று, வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1923: சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.

1924: சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். 

1934: தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார்.

1941: நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.

1944: இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியராக நியமித்தார். பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ. 1944 முதல் 1946 வரை அங்குப் பணியாற்றினார்.

1958: 1958: மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

1961: இவரது மொழிப்புலமையால் அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார்.

1966: மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக 1966 முதல் 1971 வரை பணியாற்றினார்.

1973,74: திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார்.

1974: ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார்.

விருதுகள்: இவருக்குத் தருமபுர ஆதீனம் "பல்கலைச் செல்வர்" என்றும், குன்றக்குடி ஆதீனம் "பன்மொழிப் புலவர்" என்றும் விருதுகளும், தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் சார்பில் பத்மபூசன் விருதையும் அளித்துச் சிறப்பித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com