TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 13

வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னன் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 13
Updated on
4 min read

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு

வேலு நாச்சியார்:

*ஆங்கிலேயரை எதிர்த்து ஆயதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி

*இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.

*சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.

*1772 இல் ஆங்கிலேயருக்கு முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.

*பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார.

*வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னன் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.

*1780 ஆண் ஆண்டு தம் கணவரை கொன்றவர்களை வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.

கடலூர் அஞ்சலையம்மாள்:

*1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.

*1921 ஆண் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோது இவரும் தம் பொதுவாழ்க்கையை தொடங்கினார்.

*நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.

*வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேயே அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.

*நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.

*காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள்  அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.

*இவர் காந்தியடிகளால் "தென்னாட்டின் ஜான்சிராணி" என அழைக்கப்பட்டார்.

அம்புஜத்தம்மாள்:

*பிறப்பு: 1899 ஆம் ஆண்டு

*இவர் அனைனை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.

*இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.

*இவர் "காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று அழைக்கப்பப்படுவர்.

தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து "சீனிவாச காந்தி நிலையம்" *என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

*இவர் தம் எழுபதாண்டு நினைவாக, "நான் கண்ட பாரதம்" என்ற நூலை எழுதினார்.

*1964 ஆம் ஆண்டு இவருக்கு "தாமரைத்திரு" (பத்மஸ்ரீ) என்ற விருது வழங்கப்பட்டது.

காவடிச்சிந்து

சொற்பொருள்:

*கலாபம் - தோகை

*விவேகன் - ஞானி

*கோல - அழகிய

*வாவி - பொய்கை

*மாதே - பெண்ணே

*இசைந்த - பொருத்தமான

ஆசிரியர் குறிப்பு:

*பெயர் - அண்ணாமலையார்

*ஊர் - திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்

*பெற்றோர் - சென்னவர் - ஓவுஅம்மாள்

*நூல்கள் - காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்

*சிறப்பு: இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.

*காலம்: 1861 - 1890

நூல் குறிப்பு:

*தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அறுகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.

*இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

விக்ரம சோழன் உலா

பாடலின் பொருள்:

*கடகு மலையை ஊடறத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் - கவேரன்.

*தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் - சோழன் கரிகாலன்

*பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சொழன் செங்கணான்.

*போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் - சோழன் விசயாலயன்.

*சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன் - சோழன் முதல் பராந்தகன்.

*பதினெட்டு சிற்றூர்களையும் வென்று மலைநாடு வென்றவன் - சோழன் முதல் இராசராசன்.

*வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் - சோழன் இராஜேந்திரன்.

*சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் - சொழன் இராசாதிராசன்.

*கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் = சோழன் இராஜேந்திரன்.

*திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் - சோழன் இராஜமகேந்திரன்.

*குவடு - மலை

*பொன்னி - காவிரி

*கொத்து - குற்றம்

*அரவம் - பாம்பு

*இயர்பெயர் - ஒட்டக்கூத்தர்

*சிறப்புப்பெயர் - கவிச்சக்ரவர்த்தி

*சிறப்பு - விக்கிரமச்சொழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.

*இயற்றிய நூல்கள் - மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

*காலம் - பனிரெண்டாம் நூற்றாண்டு.

*உலா என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

*இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.

*உலா என்பதற்கு "ஊர்கோலம் வருதல்" என்பது பொருள்.

*பாட்டுடைத் தலைவன் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.

*முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்

*அவனின் தயார் - மதுராந்தகி.

*இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

*மலரின் பருவங்கள் - ஏழு

*மலரின் ஏழு பாகங்கள் - அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

செய்யுள்: திருமந்திரம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே

- திருமூலர்

சொற்பொருள்

*திடம் - உறுதி

*மெய்ஞ்ஞானம் - மெய்யறிவு

*உபாயம் - வழிவகை

*பெயர் - மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.

*காலம் - ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.

*சைவத் திருமுறைகளின் பத்தாவது திருமுறை திருமந்திரம்.

*இதற்குத் "தமிழ் மூவாயிரம்" என்னும் வேறுபெயரும் உண்டு.

*இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.

*"ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.

*திருமந்திரப் பாடல் மூன்றாம் தந்திரத்தில் எழுநூற்று இருபத்து நான்கு பாடல்களைக் கொண்டது.

தேம்பாவணி

*நகை - புன்னகை

*முகை - மொட்டு

*மேனி - உடல்

*பெயர் - வீரமாமுனிவர்

*இயற்பெயர் - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

*பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்

*பிறந்த ஊர் - இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளோன்

*அறிந்த மொழிகள் - இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்

*தமிழ்க் கற்பித்தவர் - மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்

*சிறப்பு - முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.

*இயற்றிய நூல்கள் - ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்.

*காலம் - 1680 - 1747

*தேம்பாவணி - தேம்பா + அணி

*தேம்பாவணி - தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)

*இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.

*இந்நூலை "கிற்த்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்" என்று சிறப்பிப்பர்.

*இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன.

திருக்குறள்: பண்புடைமை

* வழக்கு - நன்னெறி

* ஆன்ற - உயர்ந்த

* நயன் - நேர்மை

* நன்றி - உதவி

* நகையுள்ளும் - விளையைாட்டாகவும்

* பாடறிவார் - நெறியுடையார்

* மாய்வது - அழிவது

* அரம் - வாளைக் கூர்மையாக்கும் கருவி

* நண்பு - நட்பு

* கடை - பழுது

* நகல்வல்லர் - சிறிது மகிழ்பவர்

* நயம் இல - தீங்கு, இனிமையற்ற

* மாயிரு ஞாலம் - மிகப்பெரிய உலகம்

* திரிந்தற்று - திரிவது போன்றது

திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

- இராமலிங்க அடிகள்.

* பசியறாது - பசித்துயர் நீங்காது

* அயர்ந்த - களைப்புற்ற

* நீடிய - தீராத

ஆசிரியர் குறிப்பு:

* பெயர் - இராமலிங்க அடிகளார்

* பெற்றோர் - இராமையா, சின்னம்மை

* ஊர் - சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்

* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்

* சிறப்பு - வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவனார்.

* இயற்றிய நூல்கள் - திருவருட்பா, சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்

* காலம் - 1823 - 1874

* திரு + அருள் + பா = திருவருட்பா.

* இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகைப் பொருள் கொள்வர்.

* இது 5818 பாடல் கொண்டது.

நாடகக்கலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com