வாசிக்கத் தெரியாதவர்களுக்கு டிஜிட்டல் பைபிள்!
இந்திய வேதாகமச் சங்கம் (பி.எஸ்.ஐ.) மற்றும் புக் ரூம் அமைப்பு இணைந்து நடத்தும் பைபிள் விற்பனைக் கண்காட்சி சென்னை, கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தி


இந்திய வேதாகமச் சங்கம் (பி.எஸ்.ஐ.) மற்றும் புக் ரூம் அமைப்பு இணைந்து நடத்தும் பைபிள் விற்பனைக் கண்காட்சி சென்னை, கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் உள்ள பிஷப் மாணிக்கம் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இந்திய வேதாகமச் சங்கமானது கடந்த 200 ஆண்டுகளாக பைபிளை மொழிபெயர்த்தும் அச்சிட்டும் வழங்கி வருகிறது. உலகெங்கிலும் உள்ள பைபிள் பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள 820-க்கும் அதிகமான பைபிள்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
இறையியல் புத்தகங்கள், அகராதிகள், ஆய்வு பைபிள்கள், பொருள்கூறும் பைபிள்கள் போன்றவை
விற்பனைக்கு உள்ளன.
பார்வையற்றோர் படிக்கும் வகையில் ப்ரெய்லி பைபிள்களும் விற்பனைக்கு உள்ளன. பார்வையற்றோருக்கு இந்த பைபிள் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. தங்கள் பெயர், முகவரியை சங்கத்தினரிடம் பதிவு செய்தால், அவர்களுக்கு ப்ரெய்லி பைபிள் அனுப்பி வைக்கப்படும். மேலும் இந்தியாவின் 12 முக்கிய மொழிகளில் டிஜிட்டல் பைபிளும் விற்பனைக்கு உள்ளன. சிறிய ரேடியோ கருவி போன்ற ஒன்றில் பைபிளில் உள்ள வாசகங்கள் அனைத்தும் வரிசை வாரியாக பதிவு செய்யப்பட்டிருக்கும். எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் பைபிள் வாசகங்களை புரிந்துகொள்ளும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சற்று வித்தியாசமாக இளைஞர் பைபிள், கணவன் மனைவிக்கான பைபிள், பெண்களுக்கான பைபிள், குழந்தைகளுக்கான பைபிள்கள் விற்பனைக்கு உள்ளன.
சிறுவர்களுக்கென்று 45 விதமான பைபிள்கள் உள்ளன. உதாரணமாக பைபிளில் உள்ள சாகசக் கதைகளை தொகுத்து கூறும் பைபிள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புரிந்துகொள்ளும் எளிய மொழியில் வர்ணப்படங்கள் கொண்ட பைபிள் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மற்ற எல்லா இடங்களைக் காட்டிலும் இந்த இடத்தில் அதிக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நல்வழிக் கதைகள், நீதிநெறிக் கதைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கூற விரும்பும் பெற்றோர்கள் இவற்றை வாங்கிச் செல்கிறார்கள்.
இதைத் தவிர பைபிள் கதைகள் அடங்கிய சிடி, டிவிடி-க்கள், பாடல் சிடி, டிவிடி-க்கள் போன்றவையும் விற்பனைக்கு உள்ளன.
குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 10 முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மார்ச் 5-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...