பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி......

பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி, சுவாமிஜி அதனை நிறுவிய நாளில் என்ன நினைத்தாரோ அதனைத் தமது சீடரிடம் சொன்னார்.
பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி......
Published on
Updated on
1 min read

பேலூர் மடத்தின் எதிர்காலம் பற்றி, சுவாமிஜி அதனை நிறுவிய நாளில் என்ன நினைத்தாரோ அதனைத் தமது சீடரிடம் சொன்னார். 'இப்போது என் மனத்தில் தோன்றும் காட்சி என்ன தெரியுமா? இந்த மடம் கல்விக்கும் ஆன்மீகத்திற்கும் ஒரு மையமாக அமையும். அறவழி நிற்கின்ற இல்லறத்தார்கள் இதைச் சுற்றி வீடுகளைக்கட்டிக் கொண்டு வாழ்வார்கள். நடுவே துறவிகள் வாழ்வார்கள். மடத்திற்குத் தெற்குப் பகுதியில் ஆங்கிலேய மற்றும் அமெரிக்கச் சீடர்கள் வாழ்வதற்கான வீடுகள் கட்டப்படும். இந்தத்திட்டம் எப்படி இருக்கிறது?'

அற்புதமான கற்பனை என்றார் சீடர். உடனே சுவாமிஜி, கற்பனையா? நம்பிக்கையற்றவனே! காலப்போக்கில் இவை எல்லாமே நடக்கும். நான் அதற்கான அடிக்கல்லை மட்டுமே அமைக்கிறேன். இதன்பிறகு என்னென்ன நடக்கப் போகிறது, தெரியுமா! நான் சிலவற்றைச் செய்வேன். ஆனால் உங்கள் உள்ளத்தில் பல கருத்துக்களை விதைத்துச் செல்வன். நீங்கள் அவற்றை எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்' என்று கூறினார்.

ஸ்ரீராமகிருஷ்ணரை ஒரு நிரந்தர இடத்தில் நிறுவிய சுவாமிஜி தமது வாழ்க்கைப் பணிகளுள் ஒன்றுநிறைவுற்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். ஸ்ரீராமகிருஷ்ணரை மையமாகக் கொண்ட இந்த மடம் காலப்போக்கில் எப்படி செயல்படப் போகிறது, என்னென்ன அரும் காரியங்களைச் சாதிக்கப் போகிறது என்பதையெல்லம் அவர் உணர்ந்தே இருந்தார். அதனை அவ்வப்போது தெரிவிக்கவும் செய்தார். ஆனால் யுகத்தின் ஆச்சாரியராக, யுக நாயகராக, உலக குருவாகத் தோன்றியவர் சுவாமிஜி. தாம் கூறியவை அப்படியே நடைபெற வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் அவருக்கு இருக்கவில்லை. காலப்போக்கில் சமுதாயத்தில் எழுகின்ற மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல் முறையில் தமக்குப் பின்னால் வருபவர்கள் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பையும் அவர் அளித்தார்.

பேலூர் மடம் நிறுவப்பட்டு, ஸ்ரீராமகிருஷ்ணர் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டாலும் 1899 ஜனவரி வரை மடம் பழைய இடத்தில், அதாவது நீலாம்பர் முகர்ஜியின் தோட்ட வீட்டிலும் தொடர்ந்து இயங்கியது. பேலூர் மடம் நிறுவப்பட்ட நாளிலிருந்தே சில துறவிகள் புதிய மடத்தில் வாழத் தொடங்கினார்கள். படிப்படியாக எல்லாம் புதிய மடத்தில் இயங்கத் தொடங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com