சுவாமிஜி அமைத்த ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில்

பேலூர் மடத்தில் அமைய வேண்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மனத்தில் கண்டார் சுவாமிஜி.
சுவாமிஜி அமைத்த ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில்
Published on
Updated on
1 min read

பேலூர் மடத்தில் அமைய வேண்டிய ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மனத்தில் கண்டார் சுவாமிஜி. அந்தக் கோயிலுக்கான திட்டத்தையும் வகுத்தார். அது விஷயமாக அகண்டானந்தரிடமும் விஞ்ஞானானந்தரிடமும் பேசினார்.

அந்தக் கோயில் எங்கே அமைய வேண்டும் என்பது பற்றி கூறினார். பிறகு விஞ்ஞானானந்தரிடம் தமது கருத்துக்ககுள்கு ஏற்ப, கோயிலுக்கான வரைபடம் ஒன்றை வரையுமாறு கூறினார். ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா மதங்களுக்கும் எண்ணற்ற கருத்துக்களுக்கும் இருப்பிடமாக திகழ்ந்தார். அவருக்கு அமைய இருக்கின்ற கோயிலும் எல்லா கட்டிடக்கலை அழகுகளின் சங்கமமாகத் திகழ வேண்டும். கிரேக்க, ரோமானிய, இந்து, இஸ்லாமியக் கலைகளின் அழகெல்லாம் அதில் மிளிர வேண்டும்' என்று தெரிவித்தார்.

விஞ்ஞானானந்தர் அதற்கேற்ப வரைபடம் தயார் செய்தார். சுவாமிஜியின் ஆலோசனைகளுக்கேற்ப இரண்டு மூன்று முறை படம் திருத்தி வரையப்பட்டது. அதன்பிறகு படத்தை ஏற்றுக் கொண்டார் சுவாமிஜி. ஆனால் விஞ்ஞானானந்தரிடம், ஸ்ரீராமகிருஷ்ணரின் கோயில் உருவாகும் போது, அதைக் காண நான் இந்த உடம்பில் இருக்கமாட்டேன். ஆனாலும் மேலே இருந்து அதனைக் காண்பேன் என்றார்.

சுவாமிஜி ஆமோதித்த வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டுள்ளது. சுவாமிஜியைப் பொறுத்தவரை அவரது பணிகள் நிறைவுற்றதுபோல் தோன்றியது. ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ண மிஷன் ஆகிய இரட்டை இயக்கங்கள் சிறப்பாகச் செயல்படுவது கண்டு திருப்தி கொண்டார் சுவாமிஜி. அவற்றிற்கான சட்ட திட்டங்கள் சிலவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. பல கடிதங்களில் இதுபற்றி குறிப்பிடவும் செய்திருந்தார். 1896 ஏப்ரல் 27ம் நாள் சகோதரத் துறவிகளுக்கு எழுதிய கடிதத்தில் விரிவாக சுவாமிஜி சில சட்டதிட்டங்களை எழுதி அனுப்பியிருந்தார். இதில் மடத்து நிர்வாகம், நிர்வாகக்குழு, மடத்தில் இருக்க வேண்டிய துறைகள், துறவியரின் வாழ்க்கை முறை போன்றவற்றை எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com