பிரம்மவாதின் ஆங்கிலப் பத்திரிகை தொடக்கம்

சுவாமிஜியின் கடிதங்கள் இந்தியாவில் முக்கியமாக சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் எழுதப்பட்டன.
பிரம்மவாதின் ஆங்கிலப் பத்திரிகை தொடக்கம்
Published on
Updated on
1 min read

சுவாமிஜியின் கடிதங்கள் இந்தியாவில் முக்கியமாக சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் எழுதப்பட்டன. சென்னையில் அளசிங்கர் முதலானோர் சுவபாமிஜியின் ஆணைப்படி உடனடியாக ராமகிருஷ்ண சங்கம்' ஒன்றை அமைத்து செயல்படத் தொடங்கினர். சுவாமிஜி விரும்பியதற்கு ஏற்ப மற்றொரு பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. அது 'பிரம்மவாதின்' என்ற ஆங்கிலப் பத்திலிகை. இதற்கான நோக்கத்தைப் பின்வருமாறு எழுதினார் அளசிங்கர்.

'சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலில் "பிரம்மவாதின்" என்ற பத்திரிகை ஆரம்பிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட வேதாந்த ஞானத்தை விளக்குதல், மனிதகுலத்தின் சமுதாய மற்றும் நல்லொழுக்க முன்னேற்றத்திற்காகப் பாடுபடுதல் இவை இந்தப் பத்திரிகையின் நோக்கமாகும்.

1895 செப்டம்பர் 15ம் நாள் பிரம்மவாதின் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் முதல் இதழ் அச்சானது. அளசிங்கர் அதன் ஆசிரியர் ஆனார். சேவையே உருவானவராக பணிவின் வடிவமாக இருந்த அளசிங்கரின் பெயர் பத்திரிகையில் எங்குமே அச்சிடப்படவில்லை.

சுவாமிஜியின் ஆசிகளை நெஞ்சில் பதித்து பணி புரிந்தார் அளசிங்கர். குறைந்த வருமானம் உடையவராக இருந்தும் தமது வீட்டுப் பிரச்சினைகள், மற்ற வேலைகள் அனைத்தையும் மீறி வேலை செய்தார் அவர். சுவாமிஜி நியூயார்க், லண்டன் போன்ற இடங்களிலிருந்தும் சந்தாதாரர்களைச் சேர்ந்தார். அளசிங்கரின் மைத்துனரான பேராசிரியர் ரங்காச்சாரியர் மற்றும் சென்னையிலுள்ள முக்கியமான பலர் பத்திரிகையில் எழுதினர். ஆரம்பத்தில் சி.ஜி நரசிம்மாச்சார், ஆர்.ஏ.கிருஷ்ணமாச்சார், ஜி.வெங்கடரங்க ராவ் ஆகியோர் பத்திரிகை வெளிவர உதவி செய்தனர். பல இளைஞர்களும் அளசிங்கருடன் இணைந்து பணியாற்றினர். ஒரு பக்கம் சங்கரர், ராமானுஜர், சதாசிவ பிரம்மேந்திரர், பதஞ்ஜலி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்பு; கான்ட் முதலான மேலைத் தத்துவ அறிஞர்களின் படைப்புகள்; முக்கியமான மதங்கள் பற்றிய கட்டுரைகள்; ஸ்ரீராமகிருஷ்ரின் துறவிச் சீடர்கள், தர்மபாலர், மாக்ஸ்முல்லர் என்று பலரது கட்டுரைகள் ஆகியவற்றுடன் வெற்றிகரமாக பிரம்மவாதின் பத்திரிகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com