
மக்களை எழுப்புவதற்காக சுவாமிஜி அளித்த மகா மந்திரமும் உண்மை விளக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்கும் விதை ஆயிற்று. நமது சுதந்திரப் போராட்டத்தில் பலவிதமான போக்குகளைக் கொண்ட மாமனிதர்கள் ஈடுபட்டார்கள். மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற மிதவாதிகள் பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் போன்ற மிதவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பிபின் சந்திர பால், அரவிந்தர் தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், பாரதியார், வ.வே.சு ஐயர் சுப்பிரமணிய சிவா, தென்னாட்டு சுபாஷ் என்ற போற்றப்பட்ட முத்துராமலிங்க தேவர் போன்றோர் இவர்கள் அனைவருக்கும் தூண்டுதலாக இருந்தவர் சுவாமிஜி என்பது அவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும். இனி, தீவிரவாதிகளும் கூட சுவாமிஜியின் கருத்துக்களை அச்சிட்டு வினியோகித்தார்கள்! இதனால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் ராமகிருஷ்ண மிஷனையே சந்தேகக் கண்ணுடன் பார்க்க நேர்ந்தது என்பது வேறு விஷயம்!
இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிலும் தாய்நாட்டுப்பற்றை ஊட்டி அவர்களைத் தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடத் தூண்டியவர் சுவாமிஜி.அதனால்தான் மகாத்மா காந்தி, 'விவேகானந்தர் இலக்கியத்தை நான் மிகவும் ஆழ்ந்து படித்துள்ளேள். அவருடைய படைப்புகளைப் படித்த பிறகு எனக்கு என்தாய்நாட்டின் மீதுள்ள பற்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது என்றார் ஜவஹர்லால்நேரு, விவேகானந்தர் சாதாரணமாக நாம் கொள்கின்ற பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் அவர் ஒருவர் என்பதில் ஐயமில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.