இணை (த)யத்தில் வாழும் எம் தமிழ் : கவிஞர் இரா .இரவி

Published on
Updated on
1 min read

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய
ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி !

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும் 
புலம் மறக்காமல் வளர்க்கும் நம் தமிழ் மொழி !

அழியும் மொழிகளில் பட்டியலிட்ட ஐ .நா .மன்றமே
ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ் வளர்ச்சிக் கண்டு !

அழிவில்லை என்றும் நம் தமிழுக்கு அறிவிப்போம்
அகிலம்  முழுவதும் காணலாம் இணையத்தில் தமிழ் !

கதை ,கவிதை ,கட்டுரை ,மதிப்புரை அனைத்தும்
கண்டு ரசிக்கலாம் எழுதி மகிழலாம் இணையத்தில் !

பதிவிட்ட சில நொடிகளில் எங்கும் காணலாம்
பரந்து விரிந்த உலகம் முழுவதும் வாசிக்கலாம் !

விஞ்ஞான வளர்ச்சியான இணையத்தின் பயனை
விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன் !

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர்  தொடங்கியவன்
பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியவன் நான் !

ஐந்து  லட்சம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர்
அனைத்து முன்னணி இணையங்களிலும்  இணைப்பு   !

தமிழன் இல்லாத நாடே இல்லை உலகில்
தமிழர்களின் இணைப்புப் பாலம் இணையத்தில்  தமிழ் !

இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை
எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு !

இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை
இதயத்திலும் பதிந்ததால் பெற்றது உலகப் புகழ் !

இணையத்தில்   தமிழ் வளர்க்கும் தினமணி கவிதை மணிக்கு
இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !

தினமணி இணை(த)யத்தில் வாழும் நம் தமிழ்
திக்கெட்டும் புகழ் பரப்பும் தித்திக்கும் தமிழ் பரப்பும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com