பணமே என்ன உன் மறுபக்கம் ?
கிள்ளி போடாதவனும்
அள்ளி அள்ளி போடுகிறான்
கோவிலில்
பக்தியா ? பாவ மன்னிப்பா ?
உதிரத்தால் ஒன்றான
உறவுகளும் பகையாகி
வேறு வேறாய்
சந்தேகமா ? சகுனியா ?
பட்டினியில் பழரசமாய்
படிப்பினிலே புத்தகமாய்
வாழ வைக்கும்
வழிதுணையா ? வாழ்வாதரமா ?
வலியினிலே மருந்தாக
பனியினிலே போர்வையென
உரு மாறும்
கடவுளா ? கருணையா ?
இருப்பவனோ பதறுகிறான்
இல்லாதவன் அலறுகிறான்
உனை மாற்ற
பூதமா ? புதையலா ?
பணமே என்ன உன் மறுபக்கம் !!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.