பணத்திற்கோர் கொம்புமுளைத் தாலே அந்தப் பணந்தானே பிணமாகும் உண்மை யன்றோ!பணமென்றால் பிணங்கூட வாய்தி றக்கும் பழமொழியே பணத்தின்ம றுபக்கங் காட்டும்.பணமென்றால் பத்துஞ்செய் யுமெனப் போற்றும் பகட்டொன்றே இருபக்க நிலையைக் காட்டும்.பண்த்தாலே ஆகாத தேது மில்லை பணத்தாலே சாகாத தேது மில்லை.பணமொன்றே மனிதர்க்கு வேண்டும் நெஞ்சப் பாசப்பி ணைப்பெல்லாம் பொய்யாய் போகும். பணத்தாலே நட்புறவும் பகையாய் மாறும். பழம்பெருமை யாவுமொரு புகையாய்ப் போகும்.பணமென்றால் நாப்பிறழ்ந்து மெய்யும் பொய்யாய் பாவத்தின் படுகுழியில் தள்ளிப் பார்க்கும்.பணமென்றால் உலகத்தில் பத்துஞ் செய்யும். பாதாள வேதாளம் மட்டும் பாயும்.காசா லேசாஎன்ற சான்றோர் சொல்,அக் காசாலே சா, என்றே எடுத்துக் காட்டும்,காசென்றால் குற்றமென்ற பொருளிற் சொல்வர், காசில்லை என்றாலே குறைவாய்ப் பேசும்.காசுக்குத் தருகின்ற மதிப்பைக் கூட காசினியில் வாழ்வோர்க்குத் தருவ தில்லை.காசேதான் கடவுளாகிப் போன பின், அக் கடவுளுக்கும் காசாசை வந்த தன்றோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.