பணத்தின் மறுபக்கம்:  பொன். குமார்

Updated on
1 min read

மனிதர்களை எல்லாம்
மயக்கத்தில் வைத்திருந்த து
பணம்.

மனிதர்களின்
மதிப்பீட்டை 
தீர்மானிப்பதாக இருந்த து
பணம்.

பணம் இருப்பவரையே
பெரிய மனிதர்களாக
போற்றுகிறது
சமூகம் .

இடம் மாறும் போது
மனிதர்களையும் 
மாற்றி விடுகிறது
பணம்.

பணத்திற்கு எப்போதும்
மறுபக்கம் உண்டு.
பதுக்கி வைப்போரையே
பழி வாங்கி விடும்.

இருவரின் நட்பையும்
இல்லாமலாக்கி விடும்.
உறவுகளிடத்தில்
விரிசல் ஏற்படுத்தி விடும்.

பயன் மட்டுமில்லை
பாதகங்களையும் செய்யும்
பணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com