செல்லாத பணம் இது ..வேண்டாம் இது எனக்கு இனிமேல்! தன் மதிப்பு இழந்த பணம் வெற்று காகிதமானதே ஒரே நாளில் !நன் மதிப்புடன் வாழ்ந்த மனிதர் பலர் விதியால் தன் பொருள் இழந்து அவர் வாழ்வின் மறுபக்கம் காணும் சோகம் பார்த்து மனம் கலங்கியதுண்டு நான் ! ஒரே ஒரு வரியால் தன் மதிப்பை இழக்கும் வரை பணத்துக்கும் தெரியாது அதன் மறுபக்கம் என்ன என்று ...!பணத்தின் மறுபக்கம் என்ன என்று பார்க்கும் மனிதனுக்கு புரிய வேண்டும் அவன் வாழ்வின் மதிப்பு அவன் சேர்க்கும் பணத்தால் அல்ல என்று !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.