பணமதனின் மறுபக்கம் பாவிகளின் பிறப்பிடமாம்குணங்கெட்டோர் தம்முடனும் குலவிடுமாம்! --பிணக்கேற்கஅதுவேதான் காரணமென் றாகிடுமாம், வேண்டாமென ஒதுக்கிடுவோர் எவரோயிவ் உலகில் ?மணமில்லை , எனினும்வாழ்வை மணக்கசெயும் , நம்முடனேஇணக்கமுற எதுவொன்றும் எளிதாகும் !--பணமதனைவேண்டாதோர் உண்டாமோ வேந்தர்முதல் ஆண்டிவரை,மாண்புக்கும் இணைவுண்டா மா?பணமென்னும் மாயப்பேய் பாவியுடனும் கைகோர்க்கும்,கணப்பொழுதில் நமைவிட்டுக் கைமாறும்!--பிணமதனின்வாயதனைப் பிளக்கவைக்கும் , வக்கிரர்கள் கோட்டைபுகநேயமதை மறக்குமதன் நெஞ்சு!நயம்மிக்கோர் கைபுக நலஞ்செய்யும், நாம்கண்டுவியக்கின்ற வகையிலூர் விளக்கமுறும்!--கயவர்தம்கோட்டைபுக அதைவிடக் கொடுமையதும் வேறில்லை,நாட்டையே அழிக்குமென்றும் நம்பு!பணமதனின் மறுபக்கம் பழிபாவம் என்றாகும்,குணங்கெடச் செய்வததன் குலத்தொழிலாம்!--மனமதனை,திரித்திடும் அதுதன்னின் திறதனை வெல்லத்தான்நெறியாளன் என்றாவாய் நீ!கொல்லும்பேய் தனைவிஞ்சிக் கொடுமைதனை செய்யுமதுவெல்லுமாம் எவரையுமே விரைவாக!-- நல்லதொருதொண்டனும் அன்னதுவே, துடுக்கான முதலாளி;இன்னதனை மறுப்பவரும் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.