வீடுஊரை மனைவிமக்கள் எல்லாம் விட்டு விமானமேறி வானத்தில் பறந்து சென்றுகாடுமலை கடல்கடந்து ஓடி யோடிக் கண்விழித்து நாளெல்லாம் உடலு ழைத்துப்பாடுபட்ட தெல்லாமே வீணாய்ப் போகப் பணமாக ஈட்டியதைப் பதுக்கி வைத்தார்கேடுகெட்ட தன்னலத்தால் வந்த ஆசை கெடுமதியால் வெள்ளையெல்லாம் கறுப்பா யிற்று !தேள்கொட்ட விழிக்கின்ற திருடர் போன்று தெளிவாகப் பிடிபடுவர் எனநி னைக்கத்தாள்களாக இருந்தாலோ செல்லா தாக்கித் தடியாலே அடித்தரசு பிடுங்கு மென்றுதாள்களினைப் பொன்னாக மாற்றம் செய்தும் தரைதன்னைப் பிறர்பெயரில் வாங்கி வைத்தும்ஆள்மாற்றித் தேர்வெழுதி ஏமாற் றல்போல் அரசுதனை ஏமாற்றித் திரிகின் றார்கள் !பலரிங்கே வெள்ளையாகப் பயன்ப டுத்தும் பணந்தன்னைச் சிலர்பதுக்கி வைப்ப தாலேவலம்வந்து நாட்டைவளம் செய்வ தற்கு வழியின்றித் திட்டங்கள் முடங்கிப் போகும்நிலம்வாங்க பொன்வாங்க கட்டுப் பாட்டை நிலையாகச் சட்டமாக்கிக் கண்கா ணித்தால்புலம்பெயர்ந்து மறுபக்கம் போயி டாமல் புலம்நின்று நாடுததை உயரச் செய்யும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.