பணத்தின் மறுப்பக்கம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி 

Updated on
1 min read

ஒரு பக்கம் உணவின்மை 
மறு பக்கம் மனமின்மை 

ஒரு பக்கம் தேரோட்டம்
மறு பக்கம் ஆர்பாட்டம்

ஒரு பக்கம் நீரோட்டம்
மறு பக்கம் எதிர்நீச்சல்

ஒரு சாராரில் பாய்ச்சல்
மறு சாராரில் கூச்சல்

ஒரு இடத்தில் மேய்ச்சல்
மறு இடத்தில் கரத்தல்

ஒரு தரம் நிலைமாற்றம்
மறு தரம் உருமாற்றம்

அதிகாரம் பறிக்கும் எங்கு
பரிகாரம் கிடைக்கும்

ஒரு முறை பரிமாற்றம்
மறு முறை தடுமாற்றம்

ஒரு புறம் மகிழ்ச்சிகரம்
மறு புறம் துக்ககரம்

ஒருகதவு திறந்திருக்கும்
மறுகதவு அடைந்திருக்கும்

உள்ளோர்க்கு சொர்ணம்
பணத்தின் ஒரு பக்கம்

இல்லார்க்கு நிவாரணம் "பணத்தின் மறுபக்கம்"

வலிமை உயர்வின் மடியில்
எளிமை அதன் காலடியில்

பொதுவாக யூகித்தால் இது பாரத நாட்டின் நிலமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com